மோதகம் 2ம் வகை

தேதி: September 11, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பூரணம்

கடலைப் பருப்பு - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
பொடித்த வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்


 

கடலைப் பருப்பை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
பருப்பு குழையக் கூடாது.
ப்ரெஷர் குக்கரில் வேக வைப்பதானால் ஒரு விசில் விட்டால் போதும்.
தண்ணீரை வடிய வைத்து கரண்டியால் மசிக்கவும்.
மிக்சியிலும் ஒரு சுற்று சுற்றி எடுக்கலாம்.
சிறிது வெல்லத்தைத் சூடான தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
வெல்லம், துருவிய தேங்காய் போட்டுக் கிளறவும்.
பூரணம் சற்று கெட்டியானதும், வெந்த பருப்பைப் போட்டுக் கிளறவும்.
சுருள வந்ததும் ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கி வைக்கவும்.
மோதகம் செய்வதில் சொன்னது போல் கொழுக்கட்டை செய்யவும்.


மேலும் சில குறிப்புகள்