மாங்காய் தொக்கு -1

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பெரிய மாங்காய் - 1
மிளகாய்த்தூள் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 2 டீஸ்பூன்
கடுகு - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 20 கிராம்
உப்பு - கால் கப்
எண்ணெய் - 2 கப்


 

வாணலியை காயவைத்து வெந்தயத்தை வெறும் சட்டியில எண்ணெயில்லாமல் வறுத்துக் கொள்ளவும். வாசனை வந்தபின் எடுத்துவிடவும்.
பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து துருவிய மாங்காய் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டி மாங்காயுடன் ஒரு கப் நீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்.
வெந்தபின் மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்.
இன்னொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து, பெருங்காயப் பொடி, மிளகாய் பொடி, வெந்தயப் பொடி சேர்த்து உடனே அடுப்பை அணைத்துவிடவும்.
காரம் சேர்ந்த சூடான எண்ணெயை மாங்காயில் கொட்டி கிளறி காய்ந்த பாட்டிலில் போட்டு மூடிவிடவும்.
நன்கு ஊறி பதமானபின்பு பயன்படுத்தவும்.


மேலும் சில குறிப்புகள்