அம்மிணி கொழுக்கட்டை

தேதி: September 11, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொழுக்கட்டை மேல் மாவு
காரப்பொடி, பெருங்காயம், உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க


 

கொழுக்கட்டை மேல் மாவில் காரப் பொடி, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு பிசையவும்.
கோலி அளவில் மாவை சீடை போல் உருட்டி ஆவியில் வேக வைக்கவும்.
வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெந்த உருண்டைகளை போட்டு நன்கு வதக்கி எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள ஜெயந்தி'கா,

அம்மிணி கொழுக்கட்டையில் நீங்கள் கூறிய 'காரப்பொடி' என்பது தூய மிளகாய் பொடி/சாம்பார் பொடியா?

எல்லா கொழுக்கட்டைகளையும் ஒரு பார்வை பார்த்தாயிற்று.
மோதகம் என்பது பூரண கொழுக்கட்டை தானா?
ஒரு தடவை ரொம்பவும் ருசியான தேங்காய் வடிவிலான (சிறியது தேங்காய் போன்றவடிவம் கீழே உருண்டை மேலே குடுமி) இனிப்பு சாப்பிட நேர்ந்தது. அதன் பேர் மோதகம் என்றார்கள். ஆனால் அது ஆவியில் வேகவைத்தது அல்ல.விதவிதமான பருப்பு(பொடி)கள் சேர்த்தமாதிரி இருந்தது.
அதன் கருத்து பற்றி கூறுங்கள்.

சுபா, தூய மிளகாய் பொடி தான்

பொதுவாக எல்லா இனிப்பு கொழுக்கட்டைகளுமே தேங்காய் வடிவில் தான் செய்வார்கள். உப்புக் கொழுக்கட்டையும், இனிப்பில் எள்ளுக் கொழுக்கட்டையும் சோமாசி வடிவில் இருக்கும்.

மோதகம் 2 வகை பார்க்கவும்.

சங்கட ஹர சதுர்த்திக்கு மட்டும் தேங்காய் பூரணம் வைத்து, மேல் மாவிற்கு கோதுமை அல்லது மைதா மாவைப் பூரிக்கு பிசைவதுபோல் பிசைந்து இட்டு நடுவில் பூரணம் வைத்து சிறிய தேங்காய் போல் செய்து எண்ணெயில் பொரித்து எடுப்பார்கள். அதை சொல்கிறீர்களா என்று தெரியவில்லை. ஆனால் விநாயக சதுர்த்திக்கு ஆவியில் வேக வைத்த கொழுக்கட்டைதான் செய்வார்கள்.
ஒரு புத்தகத்தில் உருளைக்கிழங்கு பூரணம், பனீர் பூரணம் ட்ரை ப்ரூட்ஸ் பூரணம் என்று என்னென்னவோ போட்டிருந்தார்கள். நான் வீட்டில் ட்ரெடிஷனலாக செய்பவற்றை மட்டும் கொடுத்துள்ளேன்.
அன்புடன்
ஜெயந்தி

ரொம்ப தேங்க்ஸ் அக்கா,
நான் என் கணவரிடம் இந்த ரெசிபிகளை காட்டி எந்த கொழுக்கட்டை செய்ய என்று கேட்டேன்(எது செய்தாலும் அவரிடம் கேட்காமல் செய்வதில்லை அது சில சமயம் பிரட்சனையே இருந்தாலும் என்க்கு அவர் ஒபீனியன் வேண்டும்)

அவர் எல்லாமே நல்லா இருக்கு சனிக்கிழமை லீவு தானே எல்லாம் செய் என்று சொல்லி விட்டார். இன்னும் ஸ்பெசல் இருந்தால் சொல்லுங்கள் அக்கா.
நன்றிகள் பல கோடி

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. நர்மதா அவர்கள் தயாரித்த அம்மிணி கொழுக்கட்டையின் படம்

<img src="files/pictures/aa185.jpg" alt="picture" />