பண்டிகை வடை

தேதி: September 11, 2007

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு - 1/2 கப்
கடலை பருப்பு - 12 கப்
பயத்தம் பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4
முந்திரி பருப்பு - 10
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

எல்லா பருப்புகளையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு வடிகட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
பச்சை மிளகாய், முந்திரி, இஞ்சி சேர்க்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, அரைத்த மாவை வடைகளாகத் தட்டி பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

என்ன ஜே மாமி
இதற்கு வெங்காயம்,பூண்டு, கருவேப்பிலை, கொத்து மல்லி தேவையில்லையா?

ஜலீலா

Jaleelakamal

வேண்டுமானால் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம். கொத்தமல்லி சரியாக வராது.
பண்டிகைன்னா பெஸ்டிவல். தீபாவளியைத் தவிர எந்தப் பண்டிகைக்கும் வெங்காயம் சேர்க்க மாட்டோம். தீபாவளி அமாவாசை அன்று வந்தால் அதுவும் கிடையாது.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஆஹா..அப்டியே சாப்டு பழகி போச்சு போலிருக்கு உங்களுக்கு..வயிருக்கு நல்லது தான் இப்படி சாப்டா..எனக்கெல்லாம் வெங்காயம் பூன்டில்லாம சாப்பிட்டா அப்ரம் தொன்டைலயே ஸ்டக் ஆயிடும் கம்பி வெச்சு தான் உள்ள குத்தி இறக்கனும்.

தளிகா:-)

ஜெ மாமி இன்று தயிர் சாதம்,பண்டிகை வடை,பூண்டு ஊறுகாய்,மதிய வேலை முடிந்தாது சாப்பாடி கட்டி கொடுத்தாச்சு, டிபன் ரொட்டி ,நைட்டுக்கு செய்து கொண்டிருக்கிறேன் இதற்கிடயில் கொஞ்சம் அருசுவை, நல்ல மொரு மொருன்னு வந்திருக்கு
ஜலீலா

Jaleelakamal

மாமி, நேற்று "பண்டிகை வடை" செய்தேன். எப்பொழுதும் சாமிக்கு வைப்பதற்காக, ஐந்து வடை செய்து எடுத்து விட்டு, பின் வெங்காயம் போட்டு செய்வேன். முதல் முறையாக வெங்காயமே இல்லாமல் செய்தது நேற்றுத்தான், எப்பொழுதும் வடையே சாப்பிடாத என் மகன்கூட விரும்பிச்சாப்பிட்டான்.
நன்றிகள் பல..........

அன்புடன்:-).....
உத்தமி:-)