பச்சரிசி இட்லி

தேதி: September 11, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 2 கப்
முழு உளுந்து - 2 கப்
அவல் - ஒரு கைப்பிடி


 

பச்சரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக ஊறவைக்கவும்.
அவலையும் தனியாக ஊற வைக்கவும்.
ஒரு மணி நேரம் ஊறியதும் முதலில் உளுந்தை (ஊற வைத்த தண்ணீரையும் சேர்த்து) கிரைண்டரில் போட்டு குடையக் குடைய அரைத்து வழித்து எடுத்து வைக்கவும்.
அரிசியைக் கல்போக களைந்து வைக்கவும்.
பிறகு ஊற வைத்த அவலையும், அரிசியையும் கிரைண்டரில் போட்டு நைஸ் ரவை பதத்தில் அரைத்து வழித்து எடுத்து அரைத்த உளுந்துடன் சேர்த்து உப்பு போட்டு கரைத்து மூடி வைக்கவும்.
மாவு நன்கு பொங்கி வந்ததும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு நன்கு கலக்கி இட்லி வார்க்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஜே மாமி இந்த வெரும் பச்சரிசியில் இட்லி நல்ல வருமா? சோட மாவு தேவையிலையா?
என்னைடம் புழுங்கல் அரிசி இல்லை

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா புழுங்கல் அரிசி என்றால் நாலு பங்கு அரிசிக்கு ஒரு பங்கு முழு உளுந்து போடுவோம். பச்சரிசி என்பதால் சரிக்கு சரி உளுந்து போடுவோம். எங்கள் வீடுகளில் பண்டிகை நாட்களில் பச்சரிசி இட்லிதான் செய்வோம். நன்றாக வரும். சமையல் சோடா வாங்கும் வழக்கமே கிடையாது. அரிசியை மட்டும் வெந்நீரில் நனைத்தாலும் நன்றாக வரும். முதலில் கொஞ்சமாக செய்து பாருங்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

நன்றி ஜே மாமி
செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்

ஜலீலா

Jaleelakamal

ஜே மாமிக்கு ஒரு ஜே ஜே போடுங்கப்பா

ஜே மாமி பச்சரிசி இட்லிக்கு நன்றி,
முருங்கக்காய் சாம்பாருடன் சாப்பிட்டாச்சு.

நல்ல வந்தது ஆனால் எந்த அவலுன்னு சொல்லல சிகப்பு அவல் தான் கை வசம் இருந்தது.

நல்ல சாப்ட்டாக இருந்தது.இனி புழுங்கல் அரிசி இல்லாதா போது பச்சரி இட்லி.

என்றும் உங்கள்

ஜலீலா

Jaleelakamal

சமையல்ராணியின் பாராட்டால்.
நன்றி ஜலீலா.
எந்த அவல் வேண்டுமானாலும் போடலாம். ஆனால் வெள்ளை அவல் போட்டால் இட்லி நல்ல தும்பைபூ போல் வெள்ளையாக இருக்கும்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஜேமாமி நீங்க வெள்ளை அவலுன்னு போட்டு விடுங்கள்.
நான் அவல் நல்ல கால் டம்ளர் போட்டேன் ஊற வைத்து கொஞ்சம் வாயிலும் போச்சு.
அன்புள்ள அன்பு ஜேமாமி, மாலதி யாக்காவிற்கு, ஒன்றுக்கு ஒன்று போட்டேன்.
ஜலீலா

Jaleelakamal

நீங்க போட்டதுக்கு பதில் போட்டுட்டேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

idli
jaleela

Jaleelakamal

ஜெ.மாமி நான் பச்சரிசியில் இட்லி போட்டது இல்லை இதுல் ஒரு பதிவு போட்டு வைத்துக்கறேன் பின்னாநிள் யூஸ் ஆகும் செய்து பார்க்க..

எனக்கு நீங்க கொண்டுவந்த ரெசிபியை கொடுங்கோ மாமி!இன்னும் ஊருது அம்புட்டு ருஷி..
ஸ்வீட்டையும் கொடுங்க
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மாமி, நலமா இருக்கீங்களா? மாமா எப்படி இருக்காங்க ?

நானும் இதுவரை ட்ரை பண்ணல. இந்த பதிவு பாக்கும் போது நாமலும் பண்ணனும்னு நினப்பேன். மர்ழியா ஐடியாவை நானும் காபி போடறேன். அப்புறம் எடுத்து குடிக்க :-)

[மாமி நான் எலின்னு முன்ன கொஞ்ச பேருக்கு சந்தேகம் மாமி. எந்த எலின்னு யோசிப்பீங்களே? அதான் ஒரு எலி ரெண்டு எலி இல்ல, அஞ்சு எலி சேர்த்து அஞ்சலின்னு சந்தேகம் இருந்துச்சா :-)) அதுக்கு தான் நான் எலி இல்ல புலின்னு பதிவு போட்டேன், டமாஷா இருக்கும்னு.

ஆனா, நீங்க என்னய துரத்த பாக்குறீங்களே. அப்புறம் நான் அழுவேன் :-)[வடிவேலு ஸ்டைல்ல] ]

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

:)

பாஸ்மதி அரிசியில் செய்யலமா?

டியர் பரிதா பாசுமதிதான், ஆனால் வெள்ளை அவல் போடுங்கள், இல்லை கலர் கொஞ்சம் பிரவுனாக வரும்.

ஜலீலா

Jaleelakamal

thanks for your immediate reply

டியர் பரிதா நேற்று முழுவதும் போட முடியவில்லை நேற்று இட்லி இரண்டாவது தடவை ஊற்றும் போது தான் பதிவு போட்டேன்.
நல்ல சாஃப்டாக இருந்தது.
ஜலீலா

Jaleelakamal

நான் இன்று தான் பார்த்தேன், இன்னும் செய்யவில்லை, சனிகிழமை தான் செய்யவேண்டும் வீட்டில் அவல் இல்லை. இன்னும் ஒரு சந்தேகம். மிக்ஸியில் அரைப்பதற்க்கும் அதே அளவு போதுமா?

எனக்கு மிக்சியில் அரைப்பதில் உடன்பாடு இல்லை. இட்லியாக இருந்தாலும், உளுந்து வடையாக இருந்தாலும் கிரைண்டரில் அரைத்தால்தான் நன்றாக இருக்கும்.
அவல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ட்ரை பண்ணிப்பாருங்க. எல்லாமே trial and error
தான்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

hi maami,
i have tried your receipe. it was very nice.
thank you so much. thereafter, i wont be worry about the idly rice. i can do with pachai arisi.
thank you again
priya

ஜலீ எனக்கு ஒரு டவுட் நானும் எங்க வீட்டிலும் பச்சரிசி இட்லி விசேஷ நாட்களில் செய்வோம், அது எனக்கு தெரியும் ஜலி , எனக்கு நிங்க பாஸ்மதி அரிசி என்று சொல்றிங்க எது நம்ம பிரியாணி,புலாவ்க்கு உபயோகபடுத்தும் அரிசியா,இங்கு டில்டா,ஹிமாலயன் போன்ற ப்ராண்ட் தான் கிடைக்கிறது. சொல்லுங்க ஜே.மாமி,ஜலீ. நன்றிப்பா

இட்லி மிகவும் சூப்பராகயிருந்தது. அவுலுக்கு பதில் உளுந்தில் ஒரு கைப்பிடி cooked rice சேர்த்தேன். உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி

சதாலட்சுமி
மாமி உங்க பச்செரிசி இட்லி இரண்டு முறை செய்துவிட்டேன் ரொம்ப நன்றாக வந்தது.நான் மிக்சியில்தான் மாவு அரைத்து செய்தேன். ரொம்ப நன்றி மாமி. :-)

சதாலட்சுமி

திருமதி. ஜலிலா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த பச்சரிசி இட்லியின் படம்

<img src="files/pictures/rawrice_idly.jpg" alt="Raw rice idly" />

கலக்கறீங்க போங்க.
நானும் ரெசிபி போட்டோ எடுத்து வெச்சு கற்பூரம், சாம்பிராணி காட்டிக்கிட்டு இருக்கேன். அனுப்ப வேளை வரலை.
ரொம்ப நன்றி ஜலீலா. உங்க போட்டோ, உங்க ரெசிபி போட்டோ ரெண்டும் பார்த்துட்டேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ப்ரியா, ப்ஃரீதா, சதாலக்ஷ்மி, உங்களுக்கு என் நன்றி.
என் பையனும், பெண்ணும் சின்னக்குழந்தைகளாக இருந்தபோது அவர்களுக்காக தினமும் இட்லி செய்ததால் எனக்கு இட்லியே பிடிக்காது. உங்களுக்கெல்லாம் இட்லி மேல் இருக்கும் காதலைக்கண்டு எனக்கு சிரிப்பு வரும்.

ஹர்ஷினி உங்களை விரட்டமாட்டோம். புலியைத்தான் விரட்டுவோம்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

என்ன ஜே மாமி அப்படி சொல்லி புட்டீங்க உலகத்தின் பெஸ்ட் பிரேக் பாஸ்ட் இட்லி.
எனக்கும் இட்லி என்றலே பிடிக்காது. இப்ப கொஞ்ச வருஷமா தான் சாப்பிட ஆரம்பித்தேன்.
சின்னதில் ஒரே ஸ்கூலுக்கு ஒரே வார வாரம் இட்லி மிளகாய் பொடி கொண்டு போய் அலுத்து விட்டது அதுக்கப்பரம் இப்ப கொஞ்ச வருடமா தான் இட்லி .

ஜலீலா

Jaleelakamal

இதுல்லாம் அனியாயம் இந்தக்கா செய்துட்டு கம்முன்னு இருக்காம இப்ப படம் வேறயா எனக்கு அதை சாப்டனும்போல இருக்கு!

மாமி காலையில் இருந்து போன் போட்டுட்டே இருக்கேன் நாட் ரீச்சபில்னே வருது சத்த போன் போடுங்கோ பிரீயா இருக்குறப்ப..அதற்க்குள் செல்விக்காக்கு போன் செய்துட்டு வாரேன்..அவங்க அங்கே என்ன செய்யுறாங்களோ பாவமா இருக்கு

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மாமி,

உங்கள் இட்லி செய்தேன். மிருதுவாக வந்தது. நன்றி.
அட்மினுக்கு படம் அனுப்பி உள்ளேன்.

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. கவின் அவர்கள் தயாரித்த இட்லியின் படம்

<img src="files/pictures/idly_kavin.jpg" alt="idly" />

வணக்கம் ஜெயந்திமாமி. இதில் அரிசி, உழுந்து எவ்வளவு நேரம் ஊறவைக்கவேண்டும்? தயவுசெய்து எழுதுவீர்களா? ரவை இட்லி எப்படிSOFT ஆக செய்வது என குறிப்பு தருவீர்களா?அல்லது ஏற்கனவே குறிப்பு இருக்கிறதா? ப்தில் தருவீர்கள் என எதிர்பார்கிறேன்.நன்றி அன்புடன் அம்முலு.

மாமி, இந்த இட்டிலிக்கு சைட்டிஷ் தக்காளிக்காய் துவையல் செய்திருந்தேன். இரண்டுமே சூப்பர்ப்.......
நன்றிகள் பல..........

அன்புடன்:-).....
உத்தமி:-)

உத்தமி, கவின், அம்முலு உங்கள் மூவருக்கும் நன்றி.
அம்முலு செந்தமிழ்ச் செல்வியிம் "இட்லி" தலைப்பில் கொஞ்சம் தயவு செய்து பாருங்கள். நல்ல விளக்கமாக சொல்லி இருக்கிறார்கள். நானும் அந்தத் த்ரெட்டில் சொல்லி இருக்கேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஜெயந்தி மாமி 2வாரமா உங்க பச்சரிசி இட்லிதான்,இங்க எங்களுக்கு இட்லி அரிசி கிடைக்காது,ஊரிலிருந்து கொண்டு வந்துடுவோம்,ஆனா இந்த முறை அரிசி கொண்டு வர முடியலை,இந்த முறை உங்க இட்லி டிரை பண்ணலாம்னு பண்ணினேன் நல்லா இருந்தது மாமி ரொம்ப‌ நன்றி.

மாமி இங்க முழு உளுந்து கிடைக்காது,பாதியா இருக்கிற உளுந்துதான் கிடைக்கும்,அதுவும் 2 டம்ளர் போடலாமா.....
இட்லி கொஞ்சம் சப்பையா வந்தது ஏன்? பச்சரி இட்லி இப்படிதான் இருக்குமா இல்ல,உழுந்து அளவு மாறியிருக்குமா(உடைத்த உளுந்தை உபயோக்கிறதுனாலயா?)

இதில் தோசையும் செய்தேன் நல்லா மொறு மொறுனு வந்தது,ரொம்ப நன்றி(இது தோசைக்கு)

கவி சாம் எப்படி இருக்கார்? உங்கள் கணவர் நலமா?
பின்னூட்டத்திற்கு நன்றி.

தோசைக்கெல்லாம் நன்றி சொல்லி இருக்கீங்க. தோசைக்கு ரொம்ப சந்தோஷமாம்.

இப்படிக்கு
ஜே மாமி