கரும்புச்சாறு பாயசம்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கரும்புச்சாறு - ஒரு லிட்டர்
அரிசி - அரை கிலோ
பாதாம்பருப்பு - 5
திராட்சை - 5
வெள்ளரிவிதை - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 5
ஏலக்காய் - 5


 

வாய் அகன்ற பாத்திரத்தில் கரும்புச் சாற்றை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
அரிசியைக் தண்ணீரில் கழுவி கரும்பு சாற்றில் சேர்த்து வேக வைத்து அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
அரிசி வெந்து ஓரளவு கெட்டியானதும் இறக்கி வைத்து அதில் முந்திரி, திராட்சை, பாதாம், வெள்ளரிவிதை, ஏலப்பொடி எல்லாவற்றையும் பாயசத்தில் கலந்து கிளறவும்.
நன்கு ஆறியவுடன் பரிமாறவும். தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்