காரட் சட்னி

தேதி: September 12, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

காரட்-2
பெரிய தக்காளி-1
பச்சை மிளகாய்-2
வற்றல் மிளகாய்-3
தேங்காய்த்துருவல்-அரை கப்
உளுத்தம்பருப்பு-1 மேசைக்கரண்டி
எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
போதுமான அளவு உப்பு


 

காரட்டைத் துருவவும்.
தக்காளியைப் பொடியாக அரிந்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெயை ஊற்றவும்.
உளுத்தம்பருப்பு, வற்றல் மிளகாயைப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
அதே எண்ணெயில் பச்சை மிளகாய், தக்காளியைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
பிறகு காரட்டைச் சேர்த்து ஈரம் போகும் வரை வதக்கி எடுக்கவும். வறுத்த அனைத்துப் பொருட்களுடன் உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த சட்டினி மிகவும் நன்றாக இருந்தது. குறிப்புக்கு நன்றி.

காரட் சட்னியை செய்து பார்த்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி!