காரட் பாயசம்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய காரட் - ஒன்று
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
பால் - 3 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
முந்திரிப்பருப்பு - 4


 

காரட்டை கழுவி, துருவி எடுத்து, வேக வைத்து, தண்ணீரை நன்கு வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
முந்திரியை சிறிது சிறிதாக வெட்டி நெய்யில் வறுத்து வைக்கவும்.
வாய் அகன்ற பாத்திரத்தில் நெய்விட்டு அரைத்த விழுதைப் போட்டு அதனுடன் சர்க்கரையும் சேர்த்து கிளறவும்.
பிறகு தண்ணீர் ஊற்றி பாலையும் சேர்த்து நன்கு கொதித்தபின் கீழே இறக்கி அதில் ஏலக்காய், வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்