கேரமல் பாயஸம்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - ஒரு லிட்டர்
மெல்லிய ரக அரிசி - கால் கப்
சர்க்கரை - ஒரு கப்


 

அரிசியைக் கழுவி விட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து நன்கு சூடேறியதும் சர்க்கரை போட்டு இளகி பிரவுன் நிறம் வந்ததும், இறக்கி வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றவும். கிளற வேண்டாம்.
பிறகு அடுப்பில் எடுத்து வைத்துப் பாலை ஊற்றி கொதிக்க வைத்து, அதில் அரிசியை தண்ணீரை வடித்து விட்டு போடவும்.
இப்பொழுது குக்கரை மூடி, வெயிட்டை போட்டு பாலையும், அரிசியையும் வேக வைக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து, 25 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விட்டு, இறக்கி சர்க்கரையைப் போட்டு நன்கு கலந்து மறுமடியும் மூடி விடவும்.
சர்க்கரை இளகி நன்றாகக் கலந்து பாயசம் தயாராகிவிடும்.


மேலும் சில குறிப்புகள்