நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு

தேதி: September 14, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீன் - 500 கிராம்
துருவிய தேங்காய் - 3/4 கப்
சின்ன வெங்காயம் - 5 (அ) 6
மிளகு - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி(காரத்திற்கு ஏற்ப கூட்டவோ குறைக்கவோ செய்யவும்)
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி (தேவைப்பட்டால்)


 

மீனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். முடிந்தால் தோலை நீக்கி கொள்ளவும்.
துருவிய தேங்காய், மிளகு, மிளகாய் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், சின்ன வெங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக மை போல அரைத்து கொள்ளவும்.
புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த மசாலா, புளிகரைசல், உப்பு, பச்சை மிளகாய், மீதமுள்ள கறிவேப்பிலை, சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
உப்பு, புளி காரம் சரியாக இருக்கிறதா என பார்த்து கொள்ளவும். இதனுடன் மீன் துண்டுகளை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்து மீன் வெந்ததும் 5 நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கவும்.
தேவைப்பட்டால் சிறிது தேங்காய் எண்ணெய் அடுப்பிலிருந்து இறக்கும் போது சேர்க்கலாம்.


இந்த மீன் குழம்பு நாஞ்சில் நாட்டில் (கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதி இப்படி அழைக்கப்படுகிறது) ரொம்ப பிரபலம். சூடான சாதத்துடன் மிகவும் நன்றாக இருக்கும். குழம்பு கொதிக்கும் போது இடையிடையே பாத்திரத்தோடு சுழற்றி வைக்கவும். கரண்டியால் கிளற வேண்டாம். மீன் உதிர்ந்து விடும். பாத்திரத்தை சுழற்றவில்லை என்றால் மீன் பாத்திரத்தில் ஒட்டிக் கொள்ளும். திருக்கை மீன், வாளை மீன் இந்த குழம்பிற்கு நன்றாக இருக்காது. வஞ்சிரம், மத்தி போன்ற மீன்கள் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கவிசிவா இதில் தக்காளி செர்க்க தேவையில்லையா.
நாளைக்கு மீன் குழம்பு உடனே தெரிவித்தால் இந்தமாதிரி செய்து பார்க்க்கலாம் என்று.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா நான் ரெண்டு மூணு நாளா அருசுவைக்கு ஆப்சென்ட்.அதனால் உடனே பதிலளிக்க முடியவில்லை.
இந்த மீன் குழம்பிற்கு தக்காளி சேர்க்க தேவையில்லை.புளி மட்டுமே போதும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

டியர் கவிசிவா
இதில் பச்சமிளகாய், மிளகாய் தூள், மிளகு எல்லாமே காரம் அப்ப கிரேவி ரொம்ப காரமாகிவிடுமே.
தாளிக்க தேவையில்லயா?

ஜலீலா

Jaleelakamal

டியர் ஜலீலா இந்த குழம்பு ரொம்ப காரமா இருக்காது.நான் கொடுத்திருக்கும் அளவு உங்களுக்கு காரமா இருக்கும்னு நினைச்சீங்கன்னா பச்சைமிளகாய்,மிளகாய் தூள் அளவை குறைத்துக் கொள்ளலாம்.மிளகின் அளவை சிறிது குறைக்கலாம்.மசாலா அரைத்து உப்பு புளி எல்லாம் சேர்த்து டேஸ்ட் பாத்துட்டு வேணும்னா மிள்காய் தூள் சேர்த்துக்கோங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எங்க அம்மா செய்ற மாதிரி இருக்கு...

ஜலீலாக்கா இங்க வாங்க..இங்க சொல்லுங்க அப்ப தான் நாளைக்கு செஞ்சு பாக்க மத்தவங்களுக்கு உற்சாகம் வரும்

அட அதிக பிரசிங்கி தெரியும் நாம் வாழ்த்தும் போது அவர்கள் குறிப்பில் நமக்கு பிடித்ததை சொல்லி வாழ்த்தலாம் என்று தான் அப்படி சொன்னேன்.
சரி சீக்கிரம் சதம் போடும் வேலையை கவனிங்க, ஆனாலும் தளிக்கா உங்க ரெஸிபி ஒரு டிபெரெண்டான பெயர் அதே செய்து பார்க்க துண்டும்.
ஜலீலா

Jaleelakamal

ஹஹஹா ஜலீலாக்கா ஒரே சிரிப்பு தான் நான்..காலங்காத்தால இப்டி சிரிக்க வெச்சுட்டீங்களே...நான் பாத்தீங்களா உங்களுக்கு தேடக் கூட வேண்டாம் சைட்லயே போட்டு தந்துட்டேன்..அதுக்காக எனக்கு என்ன தருவீங்க.

http://s119.photobucket.com/albums/o123/thalika/misc/cookery/

இது பாத்தீங்களா இதான் தபோலேஹ் சேலட் என் முதல் குறிப்பு

கவிசிவா, நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு செய்தேன், வீட்டில் அனைவரும் விரும்பிச் சாப்பிட்டார்கள். என்னால்தான் சாப்பிடமுடியாது போய்விட்டது. விரதம் முடியட்டும் ஒருநாளைக்கு செய்து சுவை பார்க்கப்போகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த நாஞ்சில் நாட்டு மீன்குழம்பின் படம்

<img src="files/pictures/aa295.jpg" alt="picture" />