நெத்திலி கருவாடு சம்பால்

தேதி: September 14, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நெத்திலி கருவாடு - 100 கிராம்
வேர்க்கடலை - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 6
தக்காளி - 1
பழுத்த சிவப்பு மிளகாய்(அ)வெந்நீரில் ஊற வைத்த காய்ந்த மிளகாய் - 20
பூண்டு - 3 பல்
உப்பு - தேவைக்கேற்ப
சர்க்கரை - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 100 மில்லி


 

நெத்திலி கருவாட்டை மண் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி கருவாட்டை வறுத்து (deep fry) பேப்பர் டவலில் வடிய வைத்து கொள்ளவும்.
அதே எண்ணெயில் வேர்கடலையையும் வறுக்கவும். சின்ன வெங்காயம், மிளகாய், பூண்டு, தக்காளி, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.
வாணலியில் மீதமுள்ள எண்ணெயில் அரைத்த கலவையை போட்டு நன்றாக வதக்கவும்.
பச்சை வாசனை மறைந்ததும் வறுத்த கருவாடு, வேர்கடலை சேர்த்து கிளறவும்.
தண்ணீர் வற்றி ட்ரை ஆனதும் இறக்கவும். சம்பால் ரெடி.


இது ஒரு மலாய் உணவு. நெய் சாதத்துடன் நன்றாக இருக்கும். காற்று புகாத டப்பாவில் வைத்தால் ஒரு வாரம் வரை கெடாது. கருவாட்டில் உப்பு இருப்பதால் உப்பு பார்த்து சேர்க்கவும்.

மேலும் சில குறிப்புகள்