சிக்கன் போரிட்ஜ்

தேதி: September 14, 2007

பரிமாறும் அளவு: 6 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - 500 கிராம்
பிரவுன் ரைஸ் (அ) பொன்னி பச்சரிசி - 2 கப்
சிக்கன் ஸ்டாக் - 6 கப் (அ) சிக்கன் ஸ்டாக் க்யூப் - 1
இஞ்சி - 3 துண்டு
சின்ன வெங்காயம் - 10
வெங்காயத்தாள் - 4 (அ) 5
உப்பு - தேவைபட்டால்
சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்


 

சிக்கன் ஸ்டாக் செய்யும் முறை:
கோழியை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு 2 லிட்டர் நீர் சேர்க்கவும். இதனுடன் உப்பு 2 வெங்காயத்தாள் இஞ்சி 1 துண்டு போட்டு கொதிக்க விடவும்.
அரை மணி நேரம் கொதித்த பிறகு வடிக்கட்டி கொள்ளவும். 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தால் கொழுப்பு முழுவதும் மேலே ஒரு லேயராக வந்து விடும்.
அதை நீக்கி விட்டால் கொழுப்பு இல்லாத ஸ்டாக் ரெடி. ஸ்டாக் வீட்டில் செய்ய முடியவில்லை என்றால் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் ஸ்டாக் பயன் படுத்தலாம். ஸ்டாக் க்யூப் வாங்கி தண்ணீரில் கரைத்தும் பயன்படுத்தலாம்.
ஒரு பாத்திரத்தில் அரிசியை களைந்து எடுத்து கொள்ளவும்.
அதனுடன் வட்டமாக வெட்டிய இஞ்சி, சிக்கன் ஸ்டாக் சேர்த்து குக்கரில் 6 விசில் வரை வேக விடவும்.
வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி லேசாக சோள மாவு தூவி எண்ணெயில் பொரித்து வைத்து கொள்ளவும்.
குக்கரை திறந்து கஞ்சியில் உள்ள இஞ்சியை நீக்கவும். ஸ்டாக் செய்யும் போது வேக வைத்த சிக்கனை மெல்லியதாக வெட்டி கஞ்சியில் சேர்க்கவும்.
(ரெடிமேட் ஸ்டாக் பயன்படுத்தினால் அரிசி வேக வைக்கும்போதே கோழியை சிறியதாக வெட்டி சேர்த்து வேக விடவும். உப்பும் சேர்க்கவும்)
பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி மேலே பொரித்த வெங்காயம், வெங்காயத்தாள் தூவவும். சிக்கன் போரிட்ஜ் ரெடி.


இது உடல் நிலை சரியில்லாமல் இருந்து உடல் தேருப்பவர்களுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சரியான நேரத்தில் நல்ல குறிப்பை கொடுத்திருக்கரீங்க...கன்டிப்பா இதை செய்து பார்த்துட்டு சொல்ரேன்...1 1/2 நாளில் 4 குறிப்பு..நல்ல வேகம் தான்..இன்னும் நிறைய குறிப்புகளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் அனுப்புங்கள்

தளிகா:-)

தளிகா கண்டிப்பா செய்யுங்க.நோன்பு காலத்தில் இங்கே இது செய்வார்கள்.இன்று உடம்பு சரியில்லை.தூங்கவும் பிடிக்கவில்லை.கிச்சன் பக்கம் போகவே பிடிக்கலை.அதான் இப்படி ஒரே னாளில் 5 குறிப்பு

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி செஞ்சுட்டேன்...நல்லா வந்தது..என் பொண்ணுக்கு நல்ல பிடிச்சது..நான் தேங்காய் எண்ணையில் வெங்காயத்திஅ நல்ல சிவப்பா வறுத்துட்டு அதனுடன் கலந்தேன்..நல்ல மணமா இருந்தது.ரொம்ப நன்றி கவி

தளிகா:-)

feedback கொடுத்ததற்கு நன்றி தளிகா.ப்ரௌன் ரைஸ் ல செய்து பாருங்க .இன்னும் நல்லா இருக்கும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!