கோகனட் ஜெல்லி புட்டிங்

தேதி: September 17, 2007

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மணமில்லாத ஜெல்லி பவுடர் (non flavoured jelly powder) - 15 கிராம்
கெட்டி தேங்காய் பால் - 700 மில்லி
குல மேரா(gula merah)எனப்படும் தென்னை வெல்லம் - 200 கிராம்


 

குலா மேராவை பொடித்து தேங்காய் பாலில் கரைத்து வடி கட்டவும்.
இதனுடன் ஜெல்லி பவுடரை கலந்து அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
பவுடர் கரைந்து தேங்காய் பாலும் சூடானதும் ஜெல்லி மோல்டில் ஊற்றி ஆற விடவும் .
ஜெல்லி நன்றாக செட் ஆனதும் ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.


ஜெல்லி பவுடர் பாக்கெட்டில் செய்முறை பார்த்து தேங்காய் பால் அளவை அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும். சில பிராண்ட் ஜெல்லி பவுடருக்கு சூடான தண்ணீரில் கரைக்க வேண்டும் என போட்டிருக்கும். அப்போது தேங்காய் பாலை சூடாக்கி விட்டு பவுடரை கலக்க வேண்டும். சிங்கப்பூர், மலேஷியா போன்ற south east asian நாடுகளில் குலா மேரா(gula merah) என தென்னை மரத்திலிருந்து செய்யும் வெல்லம் கிடைக்கும். அது இந்த புட்டிங்-க்கு நல்ல சுவையை கொடுக்கும். இந்தோனேசியாவில் நோன்பு கால புட்டிங்-ல் இதுவும் ஒன்று.

மேலும் சில குறிப்புகள்