சேமியா பாயசம் - 2

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சேமியா - 1 பாக்கெட்
சர்க்கரை - 2 தேக்கரண்டி
பால் - அரை கப்
ஏலக்காய் - 3
வறுத்த முந்திரிப்பருப்பு - 2 தேக்கரண்டி
குங்குமப்பூ - 2 சிட்டிகை
கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை
திராட்சை - 6


 

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சேமியாவை போட்டு வறுத்து சிவந்தவுடன் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து கெட்டியாகாமல் கிளறவும்.
பிறகு சேமியா நன்றாக வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரைந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
பாலை காய்ச்சி அதனுடன் குங்குமப்பூ, கேசரிப்பவுடர், பொடி செய்த ஏலக்காய் இவற்றைப் சேர்த்து கலக்கி அதை சேமியாவோடு சேர்க்கவும்.
நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, திராட்சை இரண்டையும் பாயசத்துடன் சேர்த்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்