பட்டர் கேக்

தேதி: September 17, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

அறுசுவை உறுப்பினரான திருமதி. ரோஸ்மேரி அவர்கள் வழங்கியுள்ள பட்டர் கேக் செய்முறை இது. இந்த முறையில் பலமுறை செய்தும் ஒருமுறைகூட தவறு எதுவும் நடக்கவில்லை என்பதை குறிப்பிடும் திருமதி. ரோஸ்மேரி அவர்கள், கேக் நன்றாக வருவதற்கு அளவுகள் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பதை தெரிவிக்கின்றார்.

 

மைதா மாவு - ஒன்றே முக்கால் கப்
பட்டர் - அரை கப்
சீனி - ஒரு கப்
வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி
ஆல்மண்ட் எசன்ஸ் - அரை தேக்கரண்டி
பால் - அரை கப்
முட்டை - 2
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
டார்ட்டர் க்ரீம் - ஒரு சிட்டிகை
உப்பு - கால் தேக்கரண்டி


 

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து, சலித்து வைத்துகொள்ளவும். இளகிய பட்டரை ஒரு பத்திரத்தில் போட்டு 2 நிமிடங்கள் அடிக்கவும். பிறகு அதனுடன் முக்கால் கப் சீனியை சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் அடிக்கவும்.
ஒரு முட்டையின் மஞ்சள் கருவை தனியே எடுத்து அதனை மட்டும் சேர்த்து அடிக்கவும். பிறகு மற்றொரு முட்டையின் மஞ்சள் கருவை பிரித்தெடுத்து சேர்த்து மீண்டும் அடிக்கவும்.
வெனிலா மற்றும் ஆல்மண்ட் எசன்ஸ்சை சேர்க்கவும். மீண்டும் சிறிது அடிக்கவும். பின்னர் சிறிது மைதா மாவை சேர்த்து மீண்டும் அடிக்கவும்.
அதன் பிறகு கொஞ்சம் பாலை சேர்த்து அடிக்கவும். இப்படியே மாவையும் பாலையும் மாற்றி மாற்றி சேர்த்து அடிக்கவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கருவை எடுத்துக்கொண்டு நுரை வரும் வரை அடிக்கவும்.
இதனுடன் cream of tartar சேர்த்து மீண்டும் அடிக்கவும். Soft Peak நிலை வரும்.
பிறகு கால் கப் சீனியை சேர்த்து அடிக்கவும். பிறகு Stiff Peak நிலை வரும்.
இப்பொழுது மாவையும் அடித்த வெள்ளை கருவையும் சேர்த்து கலக்கவும். அடிக்க கூடாது. இரண்டும் சேர்ந்தால் போதும். அதிகமாக கலக்க வேண்டாம்.
8 inch Pan -ல் butter paper போட்டு பாதி மாவை ஊற்றி அவனில் 20-25 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
கேக் நடுவில் ToothPick வைத்து பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும். பிறகு மீதி பாதியை இதேபோல ஆவனில் வைத்து எடுக்கவும்.
நன்றாக ஆறியபின் butter cream or cream cheese frosting தடவி, ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து மேற்புறமும் தடவி சாப்பிடலாம்.
இந்த பட்டர் கேக் இரண்டு அடுக்காக இருக்கும். முட்டையின் வெள்ளை கருவை தனியாக அடித்து கடைசியில் கலப்பதால் கேக் நல்ல மிருதுவாக வரும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

டியர் ரோஸ்மேரி பார்க்கவே அழகாக இருக்கிறது.நோன்பு முடிந்து செய்து பார்க்கிறேன்.டார்ட்டர் கிரீம் என்றால் என்ன
இவ்லோ முறை கேக்கை போட்டு அடிக்கனுமா!!. அப்பரம் கேக்கை மினிமம் பத்து அடியாவது போடனுமா..அப்போ தான் ஒலுங்கா வருமா?
( அடிக்கவும் அடிக்கவும் என்று எலுதியிருக்கு அதான் சும்மா ஒரு ஜோக்கிர்க்கு கேட்டேன் கோவிக்க வேன்டாம்)

ரோஸ் கிட்ட வாங்க....கை கொடுங்க//நேத்து செஞ்சு பாத்துட்டேன்..ஆனா அவன் ரிபேர் ஆயி காலை வாரி விட்டுடுச்சு...குக்கர்ல செய்தேன்.....சூஊஊஊஊஉப்பெரா வந்தது..பஞ்சு மாதிரி..மேல க்ரீமெல்லாம் தேக்கல..எங்க அதுக்கு நேரம் அதுகுள்ள காலி ஆய்டுச்சே...பார்கவே அழகா நீட்டா இருந்ததால தான் செய்து பார்க்கவும் தோனுச்சு...இனி அடிக்கடி ரோஸ் கேக் தான்

தளிகா:-)

தளிகா

கேக்கை குக்கரில் எப்படி செய்வது. அடியில் ஒட்டிக்கொள்ளதா

ஜலீலா

Jaleelakamal

Hi Parveen Banu,
Cream of tartar is used to stabilize egg whites while beating &prevent it from drying out.It is a natural raising agent too.இதற்கு பதிலாக எலுமிச்சை சாரு1/2டிஸ்பூன் சேர்த்தும் செய்யலாம்.இவை இரண்டும் சேர்க்காமல் செய்தால் வெள்ளை கருவை அடிக்கும் போது உடைந்து திரி திரியாக ஆகிவிடும்.மாவை நீங்க நல்லா அடித்தால் தான் சாப்பிடுபவர்கள் நம்மை அடிக்காமல் இருப்பார்கள்.

தளிகா செய்து பார்த்து நன்றாக வந்தது சந்தோஷம்.வீட்டில் கொஞ்சம் பிசி.அதான் பதில் கொடுக்க தாமதம்.அரட்டை பக்கம் பிறகு வர்றேன்.

hai thalika!
I am preetha. I have one doubt, how you have done the cake in cooker? Do you explain me?
thank you
preetha

குக்கர் வாங்கும்போது கெடைக்கும் தட்டில் பட்டெரைத் தடவி கொஞ்சம் மைதா தூவி எல்ல பக்கமும் பரவுர மாதிரி சரிச்சு சரிச்சு தட்டிட்டு மேல மாவை ஊத்தி ....cஊகரில் தட்டை வெச்சுட்டு அதுக்கு மேல மவு ஊத்தின பாத்திரம் வெச்சு..தண்ணியில்லாம வேக வைக்கனும்..முதல் 10 நிமிஷம் medium flameலயும்..அப்ரம் 40 நிமிஷம்low flkame லயுன் வேகவெச்ச கேக் ரெடி

தளிகா:-)

டியர் ரோஸ்மேரி
உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி.கேக்கை யாரும் என் மேலே தூக்கி அடிக்காம இருக்கனும்மா நீங்க சொல்வது போல செய்றேன்.
மிகவும் நன்றி.

hai thalika,
thank you for your explanation. i will try it.
bye

டியர் ரோஸ்மேரி
டார்ட்டர் கிரீம் என்றால் என்ன? அது எங்கே கிடைக்கும்?
முத்துமாரி

எங்களீடம் ஓவன் இல்லை. தயவு செய்து குக்கரில் செய்கிற் மாதிரி கேக் ரெசிபிகள் கொடுக்கவும்

ஹலோ வித்யா .மேலே உள்ள எனது பதிவைப் படிக்கவும் அதன் படி குக்கரில் நீங்கள் நல்ல பஞ்சு போன்ற கேக் செய்யலாம்.

பனானா கேக் எப்படி குக்கரில் செய்வது எப்படி? ப்ளீஸ் தெளீவாக சொல்லவும்

உங்க கேக் நேற்று செய்தேன்.டார்ட்டர் க்ரீம் இல்லாமலே செய்தேன்..ரொம்ப நல்லா சாப்டா இருந்தது...இது தான் நான் முதல் முறை செய்த கேக்..அருமை..கணவரிடம் பாராட்டு தான் போங்க..
நன்றி அருசுவை..உங்க பணி பாராட்டுக்குரியது.

தளிகா, குக்கரில் செய்யும்போது குக்கர் குண்டு போட வேண்டுமா? தண்ணீர் இல்லாமல் செய்தால் குக்கர் அடியில் எரிந்த வாசம் வராதா?
please please clarify my doubt. First time I am going to try a cake recipe.

கேக் அருமை மிருதுவாக இருந்தது....நன்றி.ஆல்மன்ட் வாடை மட்டும் எனக்கு பிடிக்கவில்லை
ஐஸ்ஸிங் மட்டும் சுதப்பல்...ஹஹஹ..

enjoy the tasty meal

வணக்கம் ரோஸ்மேரி
cake borosil bowlla வைக்கலாமா?