கத்திரிக்காய் ரசவாங்கி

தேதி: September 17, 2007

பரிமாறும் அளவு: 6 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பிஞ்சுக் கத்திரிக்காய் - 1/4 கிலோ
புளி - ஒரு எலுமிச்சங்காய் அளவு
வெந்த துவரம் பருப்பு - 2 கப்,
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
கடலைப் பருப்பு - 1/4 கப்
தனியா - 14 கப்
காய்ந்த மிளகாய் - 8
தேங்காய் - 1/2 மூடி
எண்ணைய் - தேவையான அளவு
தாளிக்க - கடுகு , கறிவேப்பிலை,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் மூன்றையும் சிறிது எண்ணை விட்டு வறுக்கவும்.
வறுபட்டதும் தேங்காய்த் துருவலைப் போட்டு லேசாக வறுத்து அரைத்து வைக்கவும்.
கத்தரிக்காயை நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு புளிக்கரைசலை விட்டுக் கொதிக்கவிடவும்.
கத்தரிக்காய் வெந்ததும் வெந்த பருப்பைப் போடவும்.
பில் அரைத்த விழுதைப் போட்டு சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி கடுகு, கறிவேப்பிலை, தாளித்துக் கொட்டவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ஜெயந்தி மாமி,
இன்றைக்கு மதியம் கீரை மசியலும்,இந்த கத்தரிக்காய் ரசவாங்கி செய்தேன்.இந்த குறிப்பில் மசாலா எல்லாம் போட்டு சரிபார்க்க சும்மா டேஸ்ட் பார்த்தேன்.அதன் பச்சை வாடை போகும் முன் சரிபார்த்ததனாலோ என்னவோ வாயில் வைத்தால் அந்த மசாலா வாடை ரொம்ப தூக்கலா இருந்தது.

ஆஹா ..நமக்கு சொதப்பிடுச்சுன்னு நினைச்சு சிறிது நேரம் கொதிக்க விட்டு பார்த்தால் ரொம்ப திக்காயிடுத்து.சரின்னு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து டேஸ்ட் பார்த்தால் ய்ப்பா..என்ன சுவை,அருமையா இருந்தது.நான் கொதிக்கும் முன்பே டேஸ்ட் பண்ணியது தான் தப்பு.

என் கணவரும் ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னார்.தங்களுக்கு தான் அந்த பாராட்டு வந்து சேரனும்.தங்களின் இந்த குறிப்புக்கு மிக்க நன்றி...

நன்றி சுகன்யா. சமைக்கும்போது பயப்படவே பயப்படாதீங்க சொதப்பிடுமோன்னு. எல்லாம் TRIAL AND ERROR தான்

அன்புடன்
ஜெயந்தி மாமி

ஜெயந்தி மாமி,எப்படி இருக்கிறீர்கள்? உங்களை பார்க்கவே முடியல‌யே! இன்று உங்க கத்தரிக்காய் ரசவாங்கி செய்தேன்,எங்க வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது.

மிகவும் நன்றி
உமா.