ரேஸ் குழம்பு

தேதி: September 17, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்
பச்சரிசி - ஒரு ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 5
சீரகம் - அரை ஸ்பூன்
புளி - சின்ன லெமன் அளவு
பெருங்காயம் - அரை ஸ்பூன்
காய்கறி வெண்டைக்காய் அல்லது கத்திரிக்காய்
உப்பு - தேவையான அளவு


 

மேலே கொடுத்துள்ள மிளகாய், பச்சரிசி, உளுத்தம்பருப்பு மூன்றையும் வெறும் கடாயில் சிவப்பாக வறுத்து வைக்கவும்.
ஆறியவுடன் சீரகம் சேர்த்து அரைத்து எடுத்து வைக்கவும்.
புளியை கரைத்து அடுப்பில் கொதிக்க விடவும் உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்.
வெண்டைக்காயை நறுக்கி சேர்க்கவும். பத்து நிமிடம் கொதித்தவுடன் வறுத்ததை சேர்த்து பிறகு ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கி வைக்கவும்,
இப்போது ரேஸ் குழம்பு ரெடி


மேலும் சில குறிப்புகள்