ஃபிஷ் ரோல்

தேதி: September 19, 2007

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீன் பொரிப்பதற்கு:
நல்ல சதைபற்றுள்ள மீன்(அய்கோரா,ஆவோலி) - அரை கிலோ
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைத்த இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
சூரியகாந்தி எண்ணெய் - மீன் பொரிக்கத் தேவையான அளவு
உள்ளே வைக்க தேவையானவை
நறுக்கிய வெங்காயம் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சூரியகாந்தி எண்ணெய் - 3 தேக்கரண்டி
தோசை செய்வதற்கு:
மைதா - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1.5 கப்
முட்டை - 2 (நன்றாக அடித்து கொள்ளவும்)
ப்ரெட் க்ரம்ஸ் - ஒரு கப்


 

முதலில் மீனில் பொரிப்பதற்கு தேவையானவற்றை சேர்த்து பிரட்டி ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
பிறகு கடாயில் எண்ணெயை காய வைத்து மீனைப் பொரிக்கவும். மீன் முழுவதுமாக வேகாமல் முக்கால் பாகம் வேகும் அளவு பொரிக்கவும்.
பொரித்த மீன் ஆறியதும் அதிலுள்ள முள்ளைக் களைந்து சதையை மட்டும் தனியாக வைக்கவும்
வேறு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் முதலியவற்றை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதனுடன் தனியாக வைத்த மீன் சதையை சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி தீயை அணைக்கவும்.
மைதாவில் தண்ணீர், உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். அதிக கெட்டியாக இல்லாமல் தளர்த்தியான ஆப்பமாவைப் போல் கரைத்துக் கொள்ளவும்.
பிறகு நாண் ஸ்டிக் பானில் ஒரு கரண்டி மைதா மாவை ஊற்றி பாத்திரத்தை சரிவாய் நான்குபுறமும் சுற்றினால் மாவு தோசை போல் படரும். இம்முறையில் செய்வதற்குக் காரணம் தோசை மெல்லியதாக வருவதற்கு.
ஒரு மூடியைக் கொண்டு மூடி தோசையை திருப்பி போடாமல் வெந்ததும் எடுத்து தவாவில் வெந்த பகுதி மேல் வருவாறு ஒரு தட்டில் இட்டு அதில் மேலே செய்து வைத்த மீன் கலவையை 2 தேக்கரண்டி வைத்து ஒரு மடக்கு மடக்கி இருபுறத்தையும் உள்ளே மடித்து பிறகு முழுவதும் சுருட்டவும்.
ஒரு புறத்தை மட்டும் வேக வைத்தற்கு காரணம் சுருட்டும் போது வேகாத பாகம் எளிதில் ஒட்டி தோசையிலிருந்து மீன் வெளியே வராது. அப்படி எல்லா தோசையிலும் மீன் வைக்கவும். (அப்படியே சாப்பிடுப்பவர்களும் உண்டு).
பிறகு சுருட்டிய தோசைகளை அடித்து வைத்த முட்டையில் முக்கி ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி வாயகன்ற தவாவில் சிறிது எண்ணெயை ஊற்றி பொரித்து எடுக்கவும்.
லேசாக பொன்னிறம் வந்தால் போதும். இதனை சூடாக பரிமாறினால் சுவையோ சுவை.


இதே முறையில் இறால், சிக்கன், முட்டை, வேகவைத்த காய்கறிகள் ஆகியவை கொண்டும் செய்யலாம். சிக்கனுக்கு மட்டும் சிறிது கரம்மசாலா தூள் சேர்க்கவும். மைதா தோசை செய்ய நேரமில்லையென்றால் ப்ரெடில் வைத்து சாப்பிடலாம் அல்லது ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டில் வைத்து பொரிக்கலாம் அல்லது பஃப் பேஸ்ட்ரி ஷீட்டில் வைத்து பேக் செய்யலாம். அல்லது வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்தால் முட்டையில் முக்கி ப்ரெட் க்ரம்ஸ் பிரட்டி அப்படியே கட்லெட்டாய் பொரிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அஸ்ஸலாமு அலைக்கும்
ஃபிஷ் ரோல் நேத்து செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.மிகவும் நன்றி.

நீங்க செய்து பார்த்து இங்க எழுதினதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்..எண்ணை அதிகமா இழுக்கும்...அதனால நான் அதிகமா பொரிக்கரதில்ல அப்படியே மைதா தோசையில் வைத்து சாப்பிடுவேன்..எண்ணை அதிகமா முஙும் அளவுக்கு இல்லாம 1/2 கப் எண்ணையில் செய்தால் போதும்....இதை ச்ப்ரிங் ரோல் ஷீட்டில் வைத்து பொரித்தாலும் எண்ணை இழுக்காது

தளிகா:-)

டியர் தாளிகா
இனி செய்யும் போது ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டில் செய்து பார்கிறேன்
உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி.

ஆச்சரியமாக இருக்கிறது நான் செய்ததை உங்களுக்கு பின்னோட்டம் அனுப்பலாம் என்று பார்த்தால் அதில் ஏற்கனவே பர்வீன் செய்து இருக்கிறார்கள் இதுவும் நான் செய்தேன் நன்றாக இருந்தது ஸ்ப்ரிங்ரோல் ஷீட்டில்தான் நான் செய்தேன் ஆனால் இப்பொழுது இல்லை ரமலானில்...பதில் அளிக்கதான் தாமதம்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

நன்றி ஜுலைஹா
என்னம்மா ஆளைய் காணோம்??என்னவோ தெரீஅ இந்த பதிவெல்லம் சமீபத்திய பதிவில் வர்ல அதான் நானும் பார்க்கலை..இப்போ எதேச்சையாக பார்த்தேன் நன்றி ஜுலைஹா