வடு மாங்காய்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வடு - அரை படி
கடுகு - 3 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
விளக்கெண்ணெய் - ஒரு சிறு தேக்கரண்டி
உப்பு - முக்கால் ஆழாக்கு


 

தண்ணீரில் மாவடுவை கழுவி நன்றாக சுத்தம் செய்துக் கொள்ளவும்.
மாவடுவுடன் விளக்கெண்ணெயை ஊற்றி பிசரி வைக்கவும்.
கடுகுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து மாவடுவோடு சேர்த்துக் கொள்ளவும்.
உப்பைப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, பொடித்த உப்பு சேர்த்து மாவடுவில் போட்டு பிசறி மூடி வைக்கவும்.
தினமும் காலையில் குலுக்கி வைத்து ஊறவிடவும் ஊறியவுடன் எடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்