பேரீத்தம் பழம் ஹல்வா

தேதி: September 20, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பேரீத்தம் பழம் - 1/4 கிலோ
பால் - 1 லிட்டர்
சீனி - 1/4 கிலோ
ரவை - 50 கிராம்
நெய் - 150 கிராம்
முந்திரி - 25 கிராம்
கிஸ்மிஸ் - 25 கிராம்


 

முதலில் பேரீத்தம் பழத்தின் விதைகளை நீக்கி சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி அதில் பேரீத்தம் பழங்களை ஊற்றி கிளறவும்.

பின் மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் ரவையை போட்டு வறுத்து அதை பேரித்தம் பழம் பால் கலவையுடன் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும்.

பின் சீனியை சேர்த்து கிளறி சீனி நன்கு கரைந்த பிறகு ஹல்வா பதம் வந்ததும் இறக்கவும்.

சிறிது நெய்யில் முந்திரி,கிஸ்மிஸை வறுத்து மேலே தூவி அலங்கரிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்