உருளைக்கிழங்கு பால் கறி

தேதி: September 20, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

உருளைக்கிழங்கு -- 2 என்னம் (வேகவைத்து மசித்தது)
சிறிய வெங்காயம் -- 1 கப் (வட்டமாக அரிந்தது)
தக்காளி -- 1 என்னம் (பொடியாக நறுக்கியது)
சீரகம் -- 1 டீஸ்பூன்
சோம்பு -- 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் -- 1/2 கப்
உப்பு -- தே.அ
எண்ணைய் -- 5 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு -- சிறிதளவு
உளுத்தம்பருப்பு -- சிறிதளவு
கறிவேப்பிலை -- 1 இனுக்கு


 

வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தளித்து கறிவேப்பிலை போடவும்.
பின் வெங்காயம் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி தக்காளியை சேர்க்கவும்.
3 நிமிடத்திற்குப் பிறகு உப்பு ,உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
சீரகம் ,சோம்பு ,தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அரைத்த மசாலாவை ஊற்றி வேக வைக்கவும்.
மீதி உள்ள எண்ணையை சேர்க்கவும்.
2 நிமிடம் சிம்மில் வைத்து சமைக்கவும்.
ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

இதை எதனுடன் சாப்பிடலாம்?

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

சுபா,ரொம்ப நாளாய் இந்த பால்கறி செய்ய ஆசை. ஆனால் செய்முறை தெரியாமல் இருந்தேன். இன்று செய்தேன், நன்றாக இருந்தது. ஆனால் கல்யாண வீடுகளில் இதனுடன் பட்டாணியும் சேர்ப்பார்கள் என்று நினைக்கிறேன். சரிதானே?

ஹாய் விதுபா,
இது கூட பட்டாணி சேர்ப்பது பற்றி எனக்கு தெரியவில்லை...
ஆனால் இதை கல்யாணவீடுகளில் செய்வார்கள் என கேள்வி பட்டு இருக்கிறேன். (நான் திருமணம் ஆகும் வரை பெரியம்மா மகள்கள் திருமணத்தைதவிர வேறெதுவும் போனதில்லை)

hi thanks it's tastes so good.

thanks for the feed back..
continue this for every one..
thanks

Nice to see you back in UAE.
How was your trip to India?
Try adding peas to the dish,it does taste good!

Dear Subha,

This recipe is very easy to make and tastes gud.Today (Pongal day) I tried this as side dish.Thanx a lot.

best regards,
Anuradha.

Be the best of what you are and the Best will come to you :)