உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

முட்டை வட்லாப்பம்

 

இஸ்லாமிய இல்லங்களில் கல்யான ம்ற்றும் முக்கியமான விழாக்களில் செய்யும் ஒரு வகை இனிப்பு.

தேவையான பொருட்கள்

  • முட்டை - 8
  • சர்க்கரை - 2 ஆழக்கு
  • தேங்காய் - 1
  • ஏலக்காய் - 3
  • நெய் - 1 டீஸ்பூன்
  • முந்திரி - 5, 6
  • உப்பு - 1 சிட்டிக்கை

செய்முறை

  • முதலில் முட்டையை நுறை பொங்க நல்ல அடித்து வைககவெண்டும்.
  • மிக்சியில் சர்க்கரையை பொடித்துக் கொள்ளவெண்டும்.
  • பிறகு தேங்காயை கட்டி பால் எடுக்க வேண்டும். முட்டை அளவும், தேங்காய் பால் அளவும் ஒன்றாக இருக்கவேண்டும். இரண்டாம், மூன்றாம் பாலை குர்மா (அ) தேங்காய் பால் சாதத்திற்கு உபயேகிக்கவும்.
  • தேங்காய் பாலில் பொடித்த சர்க்கரையை கலந்து , அடித்து வைத்த முட்டையையும் நல்ல கலந்து முந்திரியை பொடியாக அரிந்து நெயில் வறுத்து போடவும்.
  • ஏலக்காயை தோலை எடுத்து விட்டு உள்ளே உள்ள சீடை எடுத்து வெறும் வானலில் வறுத்து ,பொடித்து முட்டை கலவையில் கலக்கவும்.
  • குக்கரில் அடியில் தண்ணீர் ஊற்றி குக்கர் தட்டை போட்டு, தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து (அ) மூடி போட்ட டபராவிலும் வைக்கலாம்.
  • குக்கரில் தீயை 10 நிமிடம் அதிகமாக வைத்தும், 10 நிமிடம் சிம்மில் வைத்து பிறகு இரக்கிவிடவெண்டும்.
  • ஆறியதும் குளிரவைத்து டைமன் ஷேப்பில் கட் பன்னி பறிமாறவும்.
  • இடியாப்பத்திற்கும், தோசைக்கும் ஏற்ற டிஷ்.

குறிப்பு:

egg vattalappam

வழங்கியவர்

ஜலீலா பானு, தூபாய்

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

8 நபர்களுக்கு 15 நிமிடம் 20 நிமிடம்
  random food image


comments
முட்டை வட்டலப்பம்
அக்டோபர் 2, 2007 - 11:38am - வழங்கியவர் rasia

சகோதரி ஜலீலா
எப்படி இருக்கீங்க?
உங்களுடைய முட்டை வட்டலப்பம் செய்து பார்த்தேன் ரொம்பவும் சுவையாக இருந்தது.நான் வழக்கமா முந்திரியை அரைத்து கரைப்பேன்,இது நெய்யில் வருத்து போடும் போது நன்றாகவே இருந்தது!இந்த முறையில் ராமனாதபுரத்தில் செய்வார்கள் உங்களுக்கு தாயகம் எதுவோ?விருப்பம் இருப்பின் கூருங்கள்!மேலும் இக்குறிப்பினை வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி!
அன்புடன்
ரஸியா

அன்பு சகோதரி ரஸியா
அக்டோபர் 8, 2007 - 8:19am - வழங்கியவர் Jaleela Banu

சகோதரி ரஸியா
நலமா நோன்பு எப்படி போகுது, செய்து பார்த்து சொன்னதற்கு ரொம்ப நன்றி.
தேங்காய் பால் கட்டியாக இருக்கனும்.கலக்கியதை கொஞ்ச நேரம் பிரிஜ்ஜில் வைத்து பிறகு இன்னும் ஒரு முறை கலக்கி பின் வேக வைத்தல் இன்னும் நல்ல இருக்கும்.
ஒவ்வொரு வருடமும் முதல் வருழ பருப்பு அன்று எங்க அம்மா இதை நிறையா செய்து எங்களுக்கு கொடுப்பார்கள்.
நாங்க ஐந்து பெண்கள் ,கடைசீயில் ஒரே ஒரு தம்பி

முட்டை வட்லாப்பம்(நார்த்தனா)
நவம்பர் 20, 2007 - 8:02am - வழங்கியவர் Jaleela Banu

முட்டை வட்லாப்பம்
நார்த்தனா தேடவேண்டாம் மேலே உள்ளதை பாருங்கள்.
செயுங்கள். செய்து பார்த்து சொல்லுங்கள்.
ஜலீலா

ஜலீலாக்கா(முட்டை வட்லாப்பம்)
மே 13, 2008 - 4:28pm - வழங்கியவர் Nirupama

டியர் ஜலீலா அக்கா,

உங்கள் முட்டை வட்லாப்பம் இன்று செய்தேன்.என் கணவருக்கும்,எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது.சுவை,ரொம்ப ஜோர்.உடனே அனைத்தும் காலி.என் அபார்மெண்ட்டில் உள்ள ஒரு குடும்பத்திற்கும் கொடுத்தேன்.அவர்களும்,தங்களது நன்றியையும்,வாழ்த்தையும் உங்களுக்கு தெரிவிக்க சொன்னார்கள்.அவர்கள் குழந்தை மிகவும் விரும்பி சாப்பிட்டதாக சொன்னார்கள்.இந்த ரெஸிபியை கற்றுக் கொள்ள உதவிய உங்களுக்கு மிகவும் நன்றி.

நிருபமா.

முட்டை வட்லாப்பம்
மே 14, 2008 - 12:42am - வழங்கியவர் Jaleela Banu

என்ன நிருபமா முட்டை வட்லாப்பம் செய்து பாராட்டும் வாங்கி விட்டீர்கள் அடுத்து என்ன /

நல்ல எக்ஸ்பேட் ஆயாச்சு போல// நானும் போன வாரம் செய்து உடனே எல்லாம் காலி.

ஜலீலா

ஜலீலா-வட்டலாப்பம்
அக்டோபர் 6, 2008 - 2:24am - வழங்கியவர் RSMV

ஜலீலா 500 குறிப்பு கொடுத்தற்க்கு வாழ்த்துக்கள்.Great Job.இவ்வளவு குறிப்பு கொடுப்பது ஒன்றும் எளிது அல்ல.

உங்கள் வட்டலாப்பம் செய்தேன். நன்றாக வந்தது.எனக்கு மிகவும் பிடித்தது.

dear RMKV sorry RSMV
அக்டோபர் 6, 2008 - 4:54am - வழங்கியவர் Jaleela Banu

முட்டை வட்லாப்பம் செய்து பார்த்து பின்னூடம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.
ஜலீலா