உருளைக்கிழங்கு குருமா

தேதி: September 20, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

உருளைக்கிழங்கு -- 2 என்னம் (வேகவைத்து மசித்தது)
சிறிய வெங்காயம் -- 1 கப் (வட்டமாக அரிந்தது)
தக்காளி -- 1 என்னம் (பொடியாக நறுக்கியது)
சீரகம் -- 1 டீஸ்பூன்
சோம்பு -- 1 டீஸ்பூன்
மிளகு -- 1 டீஸ்பூன்
சாம்பார் தூள் -- 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் -- 1/2 கப்
உப்பு -- தே.அ
எண்ணைய் -- 5 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு -- சிறிதளவு
உளுத்தம்பருப்பு -- சிறிதளவு
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
பட்டை -- 1 அங்குலம்
கிராம்பு -- 3 என்னம்


 

வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தளித்து பட்டை, கிராம்பு ,கறிவேப்பிலை போடவும்.
பின் வெங்காயம் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி தக்காளியை சேர்க்கவும்.
3 நிமிடத்திற்குப் பிறகு உப்பு ,உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
ஒரு கப் தண்ணீர் சேர்த்து சாம்பார் பொடி சேர்த்து மீதி உள்ள எண்ணையை சேர்க்கவும்.
பின் சீரகம்,மிளகு,சோம்பு,தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைக்கவும்
அரைத்த கலவையை உருளை கிழங்கு கலவையில் ஊற்றி கொதிக்கவிடவும்.
7 நிமிடம் சிம்மில் வைத்து சமைக்கவும்.
ரெடி.


சப்பாத்திக்கு மிகவும் நன்றாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

இது சீரகம்,மிளகு,சோம்பு,தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து செய்ததால் வித்தியாசமான சுவை நன்றாக இருந்தது. மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"