வெண்டைக்காய் புளி மசாலா

தேதி: September 20, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

அறுசுவையில் தொடர்ந்து ஏராளமான குறிப்புகள் வழங்கி வரும் <a href="experts/3181" target="_blank">திருமதி. சுபா ஜெயப்பிரகாஷ் </a> அவர்கள் வழங்கிய செய்முறை இது. செய்து பார்த்து உங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள்.

 

வெண்டைக்காய் - 250 கிராம்
சிறிய வெங்காயம் - 10 எண்ணம்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 2 இணுக்கு
தக்காளி - 1 எண்ணம்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
புளி - ஒரு கோலி அளவு
அரைக்க :
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/4 மூடி
எண்ணைய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.
தக்காளியை சிறு துண்டங்களாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறி கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். வெண்டைக்காயை சிறு துண்டங்களாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். அத்துடன் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி வதங்கியவுடன் கீறின பச்சைமிளகாய், கறிவேப்பிலை, நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் உப்பு சேர்க்கவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காய் துண்டங்களை சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.
பின்னர் அரை கப் தண்ணீர் ஊற்றி சாம்பார் பொடி சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் புளி தண்ணீரை சேர்க்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக விழுதாக அரைக்கவும்.
புளி தண்ணீர் ஊற்றிய வெண்டைக்காய் ஒரு கொதி வந்ததும் அரைத்த மசாலாவை ஊற்றி 1/2 கப் தண்ணீர் கலந்து அதை 10 நிமிடம் மூடி வைத்து வேக விடவும். பின்னர் திறந்து நன்கு கலந்து விட்டும் மேலும் 5 நிமிடம் வேக வைக்கவும்.
இப்போது சுவையான வெண்டைக்காய் புளி மசாலா ரெடி. இதை சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

arusuvaila vara ellamay rompa nallayerukku

nan thenamu arusuvaila yerunnthuthan parthu samayal seeiyaran rompa nallayerukku

சுபா ஜெயப் பிரகாஷ் அவர்களே வெண்டைக்காய் புளிக்குழம்பு நன்றாக இருந்தது. மிகவும் அழகாக செய்து காட்டியமைக்கு நன்றி.

god is my sheperd

வணக்கம் சுபா,
உங்களுடைய குறிப்புகளில் வெண்டைக்காய் புளி மசாலா மற்றும் நிலக்கடலை சட்னி செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. உங்களுடைய குறிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. நன்றி.
இப்படிக்கு,
சுபா சந்திரமெளலி