தேதி: September 23, 2007
பரிமாறும் அளவு: 12 நபருக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பீட்ருட் - 1 கிலோ
சர்க்கரை - 500 கிராம்
பால் - 100 மில்லி
ஏலம் - 2
பட்டர் - 100 கிராம்
நெய் - 50 கிராம்
முந்திரி - 50 கிராம்
பிஸ்தா - 25 கிராம்
கிஸ்மிஸ் பழம் - 25 கிராம்
நெஸ்லே மில்க் மெய்ட் - ஒரு சிறிய டின்
உப்பு - ஒரு பின்ச்
பீட்ரூட்டை துருவி பட்டர் சேர்த்து பச்சை வாடை போக வதக்க வேண்டும்.
பிறகு பால், ஏலம், சிறிது நெய் சேர்த்து நன்றாக கிளறி வேக விடவும்.
உப்பு, பாதாமையும் (பவுடர் செய்து), சர்க்கரையும் சேர்த்து ஹல்வா பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
வற்றியவுடன் மில்க் மெய்ட் டின் ஊற்றவும்.
கடைசியில் முந்திரி, பிஸ்தாவை பொடியாக நறுக்கி கிஸ்மிஸ் பழத்தையும் சேர்த்து நெயில் வதக்கி ஹல்வா மேலே தூவவும்.
இது கல்யாணபிரியாணிக்கு ஏற்ற ஸ்வீட், நிறைய செய்து வைத்துக் கொண்டால் பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்கு பிரெட்டில் வைத்து கொடுக்கலாம். பெரியவர்களும் சப்பாத்தி, தோசைக்கு தொட்டும் சாப்பிடலாம்.
மில்க் மெய்ட் போட்டதும் அடிபிடிக்கும் நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும். ஒரு ஐந்து நிமிடத்திற்கு கிளறி அடுப்பை ஆப் பண்ணி விட்டு நெய்யில் வதக்க வேண்டியவைகளை வதக்கி போடவும்.
Comments
ஜலீலா அக்கா
ஜலீலா அக்கா உங்களுடைய குறிப்பில் பீட்ருட் ஹல்வா மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .
அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்
"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"
துஷ்யந்தி, மர்லி
துஷ்யந்தி ஒரே நாளில் இத்தனை பின்னூட்டமா?
ரொம்ப சந்தோஷம், எனக்கு எந்த இடத்திலும் பதிலளி ஆப்ஷன் வரல.
எல்லோருக்கும் ஹாய், மர்லி நோன்புக்கு பெரிய பதிவு போடலாம் என்று ஆனால் அந்த திரெட் ஓப்பன் ஆகல,
பிறகு முயற்சி செய்கிறேன்.
துஷ்யந்தி நானும் உஙக்ல் பேரிட்சை சட்னி செய்தேன், சரியா ஓப்பன் ஆகாததால் எதுவும் பதிவு போட் முடியல
Jaleelakamal