பார்லி சூப்

தேதி: September 23, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பார்லி அரிசி - 1 கப்
காய்கறி வேக வைத்த தண்ணீர் - 1 லிட்டர்
சின்ன வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 2
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு


 

பார்லியை இரவே தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
தண்ணீரை வடித்து விட்டு 2 கப் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைப்பதுபோல் வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப்போட்டு வதக்கவும்.
வதங்கியதும் அதில் வேக வைத்த பார்லி, காய்கறி தண்ணீர், நறுக்கிய கேரட் போட்டு மூடி மெல்லிய தீயில் 20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
இறக்கி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்