டோபு பீஸ் மசாலா

தேதி: September 24, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பட்டாணி - ஒரு கப்
டோபு - ஒரு பாக்கெட்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 2 பல்
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கசூரி மேதி - 1 டீஸ்பூன் (தேவைப்பாட்டால்)
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயம் பூண்டு இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். தக்காளியையும் தனியாக அரைத்துக் கொள்ளவும்.
டோபுவை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் விழுது போட்டு எண்ணெய் மேலே வரும் வரை வதக்கவும்.
பிறகு தனியா, மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து பட்டாணி சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேக விடவும்.
பிறகு டோபுவை சேர்த்து சிறிய தீயில் ஆயில் மேலே வரும் வரை வைத்து கசூரி மேத்தி, கொத்தமல்லித் தழை சேர்த்து சப்பாத்தி அல்லது சீரக ரைஸுடன் சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

டோபுவை மிக்ஸியில் சுற்றி போடுவது வித்தியாசமான டேஸ்ட்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.