உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

சரவண பவன் ஹோட்டல் சாம்பார்

 

நாம்வீடுகளில் வித விதமாக சாம்பார் வைத்தலும் சில ஹோட்டல்களின் சாம்பார் தனி சுவை யுடனும்,மணத்துடனும் இருக்கும்.அதிலும் சென்னை சரவணபவன் ஹோட்டல் சாம்பார் சுவையே தனிதான். நீங்களும் சமைத்து பாருங்கள்.

தேவையானப் பொருட்கள்

  • துவரம்பருப்பு 1/4டம்ளர்
  • கத்தரிக்காய் 1
  • முருங்கைகாய் 1
  • சாம்பார்வெங்காயம் 10
  • தக்காளி 1
  • பச்சைமிளகாய் 2
  • உப்பு தேவைக்கு
  • புளி சிறிய லெமன் அளவு
  • அரைப்பதற்க்கு
  • பொட்டுக்கடலை 2ஸ்பூன்
  • தக்காளி 1பெரியது
  • தேங்காய் 1ஸ்பூன்
  • சாம்பார்பொடி 4ஸ்பூன்
  • பெருங்காயம் சிறிது
  • தாளிக்க
  • கடுகு 1/4ஸ்பூன்
  • சீரகம் 1/4ஸ்பூன்
  • உளுந்தம்பருப்பு 1/4ஸ்பூன்
  • வற்றல்மிளகாய் 1
  • கறிவேப்பிலை, மல்லி இலை தேவைக்கு

செய்முறை

  • முதலில் பருப்பை வேகவைக்கவும்.காய்கறிகளை பொடியாக நறுக்கவும்.வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கவும்.
  • வேகவைத்தபருப்புடன்,4 டம்ளர் நீர் விட்டு நறுக்கியகாய், பச்சை மிளகாய், தக்காளி, பாதிவெங்காயம் போட்டுவேக விடவும்,உப்பு சேர்த்து. அரைக்க கூறியவற்றை மிக்ஸியில் நைசாக அரைத்துஎடுத்து அதனுடன்புளியையும்கரைத்து ஒன்றாக கொதிக்கும்சாம்பாரில் விடவும். காய் வெந்தவுடன் உப்பு சரி பார்த்து இறக்கவும்.வாணலியில் எண்ணை விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு,சீரகம்போட்டு பொரிந்ததும் பெருங்காயம், கிள்ளிய வற்றல் மிளகாய்,கறிவேப்பிலை, வெங்காயம் பொட்டு வ்தக்கி சாம்பரை அதில் ஊற்றவும். மல்லி இலை போட்டு கொதித்ததும் இறக்கவும்

குறிப்பு:

இந்த சாம்பார் இட்லி,தோசை.ஊத்தப்பம் போன்ற சிற்றுண்டிகளுக்கு நன்றாக இருக்கும்.

வழங்கியவர்

பீவி, சிங்கப்பூர்

பரிமாறும் அளவு

5 பேர் கொண்ட குடும்பத்திர்க்கு இந்த அளவுசரியாக இருக்கும்.
  random food image


comments
ரொம்ப
செப்டம்பர் 25, 2007 - 3:08am - வழங்கியவர் rumya

ரொம்ப நன்றாக இருக்கு. நான் நாளை பண்ணி பார்க்கிர்றேன். மிக்க நன்றி.

ஆகா
செப்டம்பர் 25, 2007 - 5:03am - வழங்கியவர் Jaleela Banu

ஆகா இப்பதான் ரத்னா கேஃப் சாம்பார் செய்து முடித்து விடு வந்தேன்.சரி அடுத்த ரவுண்டு சாம்பார் ம்றை வறும் போது சரவனபவா தான்.
ஜலீலா

நான் இன்று
செப்டம்பர் 26, 2007 - 4:17am - வழங்கியவர் rumya

நான் இன்று இந்த சம்பார் பண்ணி பார்த்தேன். ரொம்ம, ரொம்ம நன்றாக இருந்தது. மிக்க நன்றி.

GOD IS
செப்டம்பர் 26, 2007 - 8:28am - வழங்கியவர் beevi

GOD IS GREAT

ரொம்ப நன்றி ரம்யா.

selvi madam
பிப்ரவரி 14, 2008 - 8:19pm - வழங்கியவர் ammu2009

hello selvi madam,

enaku badam halwa recipe venum.unga kitta iruntha anupungalen

சூப்பர் பாதம் ஹல்வா
பிப்ரவரி 16, 2008 - 3:16am - வழங்கியவர் Jaleela Banu

மது ரெஸிபி என்னுடைய குறிப்பில் இருக்கு போய் பாருங்கள்.
ஜலீலா

saravanabhavan sambhar
மே 15, 2008 - 7:45pm - வழங்கியவர் alarmelup

will definitely try this and give feedback as soon as possible

Thank U
ஆகஸ்டு 18, 2008 - 3:20am - வழங்கியவர் bmsuresh

I've tried it.. excellent / superb !! Thanks a lot.

Suresh, Abu Dhabi (United Arab Emirates)