இஞ்சி தொக்கு

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இளசான இஞ்சி - 100 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய்வற்றல் - 25 - 30
கல் உப்பு - கால் கப்
பொடித்த வெல்லம் - 100 கிராம்
எண்ணெய் - 50 மில்லி


 

இஞ்சியை கழுவி தோல் சீவி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல், புளி, இஞ்சி அகியவற்றை மிக சிறிய அளவு தண்ணீரில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் பொடித்து வைத்த வெல்லத்தையும் சேர்த்து கலக்கவும். வாணலியில் 50 மில்லி நல்லெண்ணெய் காய வைத்து கடுகு, காயம் தாளித்து விழுதைச் மிதமான தீயில் வைத்து சுருளக் கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்