கருணைக் கிழங்கு கோலா

தேதி: September 24, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கருணைக் கிழங்கு -- 1/4 கிலோ
புளி -- 25 கிராம் (நீரில் கரைக்கவும்)
மிளகாய் தூள் -- 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
மஞ்சள்தூள் -- 1/2 டீஸ்பூன்
பூண்டு -- 5 பல் (பொடியாக நறுக்கியது)
உப்பு -- தே.அ
எண்ணைய் -- பொரிக்க தே.அ
தாளிக்க:
கடுகு -- 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -- 1 டீஸ்பூன்


 

கருணைக்கிழங்கை குக்கரில் 3 கப் தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
பின் தோலுரித்து நன்றாக மசிக்கவும்.
மசித்த கிழங்குடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள் , புளிகரைசல்,உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து பூண்டு சேர்த்து வதக்கவும் .
இதனுடன் கிழங்குக் கலவையை சேர்த்து நன்றாக வதக்கி சுருண்டு வரும் பொழுது இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்