கட்டில் ஃபிஷ் ரிங்(squid rings)

தேதி: September 25, 2007

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

squids(cuttle fish) கனவாய் மீன் - 1/2 கிலோ
சோளமாவு - 3 தேக்கரண்டி
கடலைமாவு - 3 தேக்கரண்டி
அரிசிமாவு - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
முட்டை வெள்ளைக்கரு - 1
ப்ரெட் தூள்- 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

கணவாயை சுத்தம் செய்து வட்ட வளையங்களாக வெட்டவும். ப்ரெட் தூள் எண்ணெய் தவிர எல்லா பொருட்களையும் கணவாயுடன் கலந்து வைக்கவும்.
10 நிமிடம் ஊற விடவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி வளையங்களை ப்ரெட் தூளில் புரட்டி பொரிக்கவும்.
பொன்னிறமானதும் கிச்சன் டவலில் வடிகட்டவும். சில்லி சாஸ், தக்காளி சாஸுடன் பரிமாறினால் ப்ளேட் மட்டும்தான் மீதமிருக்கும்.


எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். அதிகமாக சூடாகி விட்டால் ரிங்ஸ் கருகி விடும். சூடு போதவில்லையென்றால் மொறு மொறுப்பாக இருக்காது. கணவாயும் ரப்பர் போல் ஆகிவிடும். மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. விருந்துகளில் starter ஆக வைக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்