பருப்பு கீரை மசாலா

தேதி: September 25, 2007

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கீரை - 1 கட்டு(எந்த கீரையும்)
பாசிப்பருப்பு - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 3/4 கப்(பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
மல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

பாசிப்பருப்பை குழைய வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், நீளவாக்கில் வெட்டிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்.
எல்லாம் வதங்கி சேர்ந்து வரும் போது பொடியாக நறுக்கிய கீரை, உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
மிளகாய் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
கொதி வந்து கீரை வெந்ததும் வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.
உப்பு, புளி, காரம் சரி பார்க்கவும். நன்றாக கொதித்து மணம் வந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும்.


தக்காளி புளிப்பு குறைவாக இருந்தால் அளவை கூட்டி கொள்ளவும். கறிவேப்பிலை, மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேர்க்கவும். சாப்பிடும் போது தனியே எடுத்து வைக்க மாட்டார்கள். இது சப்பாத்தி, பூரி மற்றும் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்