பானகம்

தேதி: September 25, 2007

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெல்லம் - 200 கிராம்
சுக்கு - 1"துண்டு
ஏலக்காய் - 5
உப்பு - 1 சிட்டிகை
எலுமிச்சைப்பழம் - 2


 

வெல்லத்தை பொடித்து 5 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். உப்பு சேர்த்து எலுமிச்சைப்பழத்தை பிழிந்து சேர்க்கவும்.
ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை கல்லில் தட்டி சேர்க்கவும். பரிமாறும் போது வடிகட்டி பரிமாறவும். ஐஸ் தேவையில்லை.


எலுமிச்சைப்பழத்தின் புளிப்பு சுவை குறைவாக இருந்தால் அதிகமாக சேர்க்கவும். அவரவர் இனிப்புக்கு தகுந்த படி வெல்லம் சேர்க்கவும். இது கோடைக்கால சூட்டை தணித்து உடனடி எனர்ஜி தரும் பானம். ஷஷ்டி விரதம் இருப்பவர்கள் விரதத்தை இந்த பானகத்தை குடித்து முடிப்பார்கள்.

மேலும் சில குறிப்புகள்