பருப்பு கத்தரிக்காய்

தேதி: September 25, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் -- 250 கிராம் (நறுக்கியது)
கடலை பருப்பு -- 1/2 கப் (வேக வைத்தது)
சிறிய வெங்காயம் -- 10 என்னம் (நீளமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 3 (நீளமாக கீறியது)
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
கடுகு -- 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி -- 1 டேபிள் ஸ்பூன்
புளி -- ஒரு கோலி அளவு (ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்)
எண்ணைய் -- தேவையான அளவு
உப்பு -- தே.அ


 

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.
இதனுடன் பச்சைமிளகாய்,கறிவேப்பிலை ,வெங்காயம் சேர்த்து வதக்கி உப்பு சேர்க்கவும்.
பின் கத்தரிக்காயை சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.
பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி சாம்பார் பொடி சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் புளி தண்ணீரை சேர்க்கவும்.
புளி தண்ணீர் ஊற்றிய கத்தரிக்காய் ஒரு கொதி வந்ததும்
அதை 10 நிமிடம் மூடி வைத்து விடவும்.
இதனுடன் கடலை பருப்பை சேர்க்கவும்
பின் மீண்டும் கலந்து மீண்டும் 5 நிமிடம் வேக வைக்கவும்.
ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

பருப்பு கத்தரிக்காய் சுவையாக இருந்தது. உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"