வெந்தய களி வேறுவகை

தேதி: September 26, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 1/2 கப்
வெந்தயம் - 1 1/2 மேசைக்கரண்டி
கருப்பட்டி அல்லது வெல்லம் - 200 கிராம் (இனிப்பு குறைவாக போதுமென்றால் குறைத்து கொள்ளவும்)
தேங்காய் பால் - 2 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி


 

பச்சரிசி, வெந்தயம் இரண்டையும் கலந்து 2 மணிநேரம் ஊறவைத்து கிரைண்டரில் அல்லது மிக்ஸியில் மையாக அரைக்கவும்.
கருப்பட்டி அல்லது வெல்லத்தை கரைத்து வடிகட்டவும். வாணலியில் அரைத்த விழுது, தேங்காய்பால், கருப்பட்டி கரைசல் கலந்து கட்டியில்லாமல் கிளறவும்.
அடுப்பில் வைத்து 1 மேசைக்கரண்டி நெய் விட்டு கிளறவும். மாவு வெந்து களி பதத்திற்கு வந்ததும் மீதமுள்ள நெய்விட்டு கிளறி இறக்கவும். கருப்பட்டி மணத்துடன் களி ரெடி.


கருப்பட்டி கிடைக்கவில்லை என்றால் வெல்லம் பயன்படுத்தவும். சூட்டினால் ஏற்படும் வாய்ப்புண்ணை உடல் சூட்டை தணித்து குணப்படுத்தும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். மாதமொருமுறை சேர்த்து கொண்டால் வாய்ப்புண் பிரச்சனையே இருக்காது.

மேலும் சில குறிப்புகள்