புளிசேரி

தேதி: September 26, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெள்ளை பூசணி - 1 துண்டு
தயிர் - 1/2 கப் (மிதமான புளிப்பில்)
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல் - 1/2 கப்
பச்சைமிளகாய் - 2
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 1 சிறிய பல்
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து


 

வெள்ளை பூசணியை 1 செ.மீ அளவுள்ள துண்டுகளாக்கி உப்பு சேர்த்து வேக விடவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மையாக அரைக்கவும். காய் வெந்ததும் அரைத்த கலவையை போட்டு கொதிக்கவிடவும்.
பச்சை வாசனை போனதும் இறக்கி ஆற விடவும். தாளிக்க வேண்டியவற்றை தாளித்து சேர்க்கவும்.
ஆறியதும் தயிரை நன்றாக அடித்து சேர்க்கவும். உப்பு தேவைப்பட்டால் சேர்க்கவும்.


காய் எதுவும் சேர்க்காமல் செய்தால் இடியாப்பத்துடன் சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்