காலிபிளவர் கடலைப் பருப்பு சுண்டல்

தேதி: September 26, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காலிபிளவர் - 1
கடலைப் பருப்பு - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - 1 கொத்து
கடுகு - 1/2 டீஸ்பூன்
மிளகு, சீரகப் பொடி
தேங்காய் எண்ணைய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

கடலைப் பருப்பை கிள்ளு பதமாக உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
பிறகு நீரை வடித்து ஆற விடவும்.
காலிபிளவரை சிறு சிறு பூக்களாகப் பிரித்து வெந்நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து எடுத்து வைக்கவும்.
ஆவியில் பூக்களை வேக வைத்து ஆறவிடவும்.
இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை தண்ணீர் விடாமல் மிக்சியில் சுற்றி வைக்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணை விட்டு கடுகு போட்டு வெடித்ததும் வேக வைத்த கடலைப் பருப்பு போட்டு பிறகு வெந்த காலிபிளவரைப் போட்டு வதக்கவும்.
சிறிது நேரம் வதக்கியதும் பொடித்ததைத் தூவி, சீரக மிளகுப் பொடி தூவி கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கி வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்