வெங்காய தோரன்

தேதி: September 26, 2007

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல் - 1/4 கப்
மிளகாய் வற்றல் - 2
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி
(சோம்பு வாசனை பிடிக்குமென்றால் கூடுதலாக 1/2 தேக்கரண்டி சேர்க்கலாம்)
பூண்டு - 1 சிறிய பல்


 

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் அரைத்த கலவையை போட்டு 2 நிமிடம் கிளறி இறக்கவும்.


சோம்பு வாசனையுடன் சுவையாக இருக்கும். சின்ன வெங்காயத்தில் செய்தால் அதிக சுவையாக இருக்கும். வெங்காயம் வதக்கும் போது தீயை மீடியமாக வைக்கவும். சின்ன வெங்காயத்தில் செய்தால் உடலுக்கு குளிர்ச்சி தரும்.

மேலும் சில குறிப்புகள்