வெள்ளைக்காராமணி எள்ளு சுண்டல்

தேதி: September 26, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெள்ளைக்காராமணி - 2 கப்
வெள்ளை எள் - 1 கப்
மிளகாய் வற்றல் - 6
தனியா - 1/4 கப்
பெருங்காயம் - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு.


 

வெள்ளைக் காராமணியை இரவே ஊறப் போடவும்.
காலையில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
தண்ணீரை வடித்து ஆற விடவும்.
வாணலியில் தனியா, மிளகாய், வெள்ளை எள், கடலைப் பருப்பு இவற்றை தனித் தனியாக வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் தேங்காய் எண்ணை விட்டு கடுகு போட்டு வெடித்ததும், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு வெந்த காராமணி, பொடித்த பொடி தூவி பெருங்காயப் பொடி சேர்த்து கலக்கி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த குறிப்பினைப் பார்த்து செல்வி. இந்திரா அவர்கள் தயாரித்த வெள்ளைகாராமணி எள்ளு சுண்டலின் படம்

<img src="files/pictures/aa175.jpg" alt="picture" />