கோழி தோரன்

தேதி: September 26, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

எலும்பில்லாத கோழி - 500 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 3 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
அரைக்க:
தேங்காய் துருவல் - 3/4 கப்
மிளகாய் வற்றல் - 4
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 1 பல்
பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து


 

கோழியை சுத்தம் செய்து 1 சென்டி மீட்டர் அளவுள்ள துண்டுகளாக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும். பாதி வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி பொடியாக நறுக்கிய கோழி சேர்த்து வதக்கவும்.
கோழியின் நிறம் மாறியதும் மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை, 1/4 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
கோழி வெந்து தண்ணீர் வற்றியதும் அரைத்த கலவையை போட்டு தேவைப்பட்டால் உப்பு சேர்த்து இரண்டு, மூன்று நிமிடம் கிளறவும்.
தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.


இது உதிரியாக இருக்கும். ரசம் சாதத்துடன் சூப்பர் காம்பினேஷன்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் கவி,
எப்படியிருக்கே? இந்தியா எப்படியிருக்கு?
உன்னோட கோழி தோரன் இன்று செய்தேன். ரொம்ப சூப்பரா இருந்திச்சு. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு. நல்லதொரு குறிப்புக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
நன்றி.

<img src="/contrib/chicken_thoran.jpg" alt="chicken thoran" />

அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விம்மா இப்பொதான் உங்களோட பின்னூட்டம் பார்த்தேன்.ரொம்ப தேங்க்ஸ்மா.
செல்விம்மான்னு எழுதிட்டு உங்க போட்டோவை பார்த்தா செல்விக்கான்னு எழுதலாம்னு தோனுது.இளமையின் ரகசியம் என்னவோ?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்புள்ள கவி!

உங்களின் ‘’கோழி தோரனும்’ ‘ ஆந்திரா கோழி கிரேவியும்’ செய்தேன். மிகவும் நன்றாக, சுவையாக இருந்தன.

அன்புள்ள மனோ மேடம், அருசுவையின் மூத்த உறுப்பினரிடமிருந்து பாரட்டு கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம். மிகவும் நன்றி மேடம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!