சோயா சுண்டல்

தேதி: September 26, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சோயா பயறு - 2 கப்
பச்சை மிளகாய் - 4
தேங்காய் துருவல் - 1/2 கப்
இஞ்சி - 1 துண்டு
மிளகு, சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து


 

சோயா பயறை இரவே ஊற வைக்கவும்.
ஊறிய சோயாவை மிதமான வெந்நீர் விட்டு கழுவவும். (அப்பொழுதுதான் சோயாவிலுள்ள வாடை போகும்).
உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை தேங்காய்த் துருவல், இஞ்சித் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். தேங்காய் வதங்கியதும் சோயாவைப் போட்டு கிளறவும். மிளகு, சீரகப் பொடி, பெருங்காயப் பொடி, நெய் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்