சின்ன உருளைக்கிழங்கு டிலைட்

தேதி: September 26, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சின்ன உருளைக்கிழங்கு வேக வைத்தது - 10
எண்ணைய் - 4 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது- 1/2 டீஸ்பூன்
புதினா இலைகள் - ஒரு கைப்பிடி
தயிர் - 6 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

வாணலியில் 1 டேஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் பாதி சீரகத்தைபோட்டு வெடித்ததும் வேக வைத்துத் தோல் உரித்த உருளைக் கிழங்கு, பச்சை மிளகாய், இஞ்சி விழுது, நறுக்கி வைத்த புதினா இலைகள், 3 டீஸ்பூன் தயிர், உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்கு சேர்ந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேறொரு வாணலியை அடுப்பில் வைத்து 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் மீதி சீரகம் போட்டு வெடித்ததும் சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
அத்துடன் மிளகாய்த் தூள், பூண்டு விழுது, மீதியுள்ள தயிர், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
எல்லாம் நன்கு சேர்ந்து வந்ததும் உருளைக்கிழங்கு கலவையைப்போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கி வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஜெயந்தி மாமி இந்த சி.உருளை கறியை செய்தேன். சூப்பராக இருந்தது. வீட்டில் அனைவருக்கும் பிடித்தது. மிகவும் நன்றி உங்களுக்கு.

இப்பல்லாம் அறுசுவை பக்கம் அதிகமாவே உங்களைக் காணோமே, பிஸியாக இருக்கிறீர்களா?

ஆமாம் கண்ணு. ரொம்ப பிசி தான். ஆபீஸ்ல, வீட்டுல எல்லா இடத்திலேயும் ரொம்ப ரொம்ப பிசி. இன்னும் தீசிஸ் வேற எழுத ஆரம்பிக்கல. இங்க வந்து உங்க கிட்ட எல்லாம் பேசாட்டா ரொம்ப டல்லாயிடுது.
பாராட்டுக்கு ரொம்ப நன்றி.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஜெயந்தி மாமி,
இன்று உங்களின் இந்த சின்ன உருளைக்கிழங்கு டிலைட் செய்தேன். டிஃபரென்ட்டாக சாப்பிட நன்றாக இருந்தது. என் ஹஸ்-க்கு ரொம்பவே பிடித்திருந்தது. குறிப்புக்கு நன்றி!

அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

helllo sri.howz weather in NY. not sleeping.. must be 12 right

nandrey chivir
hello jayanthi today i am preparing your chinna urulai delight.it's very very taste.my childrens are eating very intrest that dish.thank you very much.

nandrey chivir