பூசணிக்காய் தயிர் பச்சடி

தேதி: September 26, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துருவிய வெள்ளைப் பூசணி - 1 கப்
புளிக்காத, ஏடு எடுத்த கெட்டித் தயிர் - 2 கப்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கடுகு, எண்ணெய் - 1/2 டெஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது


 

தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயை மையாக அரைக்கவும்.
தயிரில் அரைத்த விழுது, துருவிய வெள்ளைப் பூசணி, உப்பு சேர்த்து கடுகு தாளிக்கவும்.
கொத்தமல்லித்தழையை சேர்க்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சூப்பர் ரொம்ப நன்றாக இருந்தது, இது தான் முதல் தடவை சாப்பிட்டது. எங்கோ நான் கேள்விபட்டதுண்டு ஆனால் நான் சப்பிட்டதில்லை. இன்று சாப்பிட்டதும் தான் தெரிந்தது அதன் ருசி. நன்றி ஜெ.மாமி.

விஜி தேடித்தேடி சமைக்கிறீர்கள். அசத்தல் ராணி பட்டம் பெற வாழ்த்துக்கள். பின்னூட்டத்திற்கும் நன்றி.
அன்புடன்
ஜெயந்தி மாமி

எப்படி இருக்கிங்க? நன்றி. நான் நம்ம அருசுவையில் பூசனிக்காய் தயிரி பச்சடி என்று போட்டேன். உடனே வந்தது அது உங்க ரெசிப்பி என்று அப்ப தான் தெரிந்தது.உங்க ரெசிப்பி ரொம்ப ஈசியாக இருந்தது.
உங்க ப்ரெட் போளி கூட ரொம்ப நன்றாக இருந்தது.பட்டம் எல்லாம் வேண்டாம் நமக்கு நல்ல ருசியாகவும் நான் செய்யாத சமையலாகவும் இருந்தால் மட்டும் தான் செய்வேன், இது அந்த மாதிரி இருந்ததால் உடனே உங்களுக்கு பதிவு போட்டேன். ரொம்ப நன்றி மேடம். இப்ப எல்லாம் நிங்க ரெசிப்பி குடுப்பதே இல்லை ஏன் மேடம். கொஞ்சம் குடுங்க. என்னை மாதிரி இருக்கிறவர்களுக்கு ஈசியா இருக்கும். ஆமாம் உங்க ரெசிப்பியில் இன்னும் 2 அயிட்டம் பார்த்து வைத்துள்ளேன். செய்துட்டு பிறகு பதிவு போடுகிறேன். ஒ.கே பை

ஆஹா, பூசணிக்காய் பச்சடி சூப்பர் டேஸ்ட் மாமி. முதல் முறையாக இன்றுதான் இந்த பச்சடி சாப்பிட்டேன். வீட்டில் என் கணவர், பொண்ணு எல்லோருக்குமே ரொம்ப பிடித்து இருந்தது. அட, இத்தனை நாளா இப்படி ஒரு ஐயிட்டம் இந்த காயில் செய்யலாமென்று தெரியாமல் போய்விட்டதே என்று நினைத்துக்கொண்டேன். இனி அடிக்கடி செய்வேன். இந்த சூப்பர் குறிப்புக்கு ரொம்ப நன்றி மாமி!

அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ