எண்ணெய் மாங்காய்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாங்காய் - 15
உப்பு - அரை ஆழாக்கு
மிளகாய்வற்றல் - முக்கால் ஆழாக்கு
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - சிறு துண்டு
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
எண்ணெய் - அரை ஆழாக்கு


 

மாங்காயை எட்டாக நறுக்கி ஒரு கற்சட்டி அல்லது ஜாடியில் போட்டு உப்பைப் போட்டு நன்றாகக் குலுக்கிவைக்கவும்.
4 நாட்களுக்கு தினமும் குலுக்கிவிடவேண்டும். 5ஆம் நாள் கொட்டையையும் தளரையும் மட்டும் ஒரு மூங்கில் தட்டில் போட்டு வெயிலில் உலர்த்த வேண்டும்.
ஜாடியின் அடியில் சாறு அப்படியே இருக்கும். மறுநாள் உலர்த்திய தாள்களை இந்தச் சாறில் போட்டுப் புரட்டி மறுபடியும் வெயிலில் உலர்த்தவும்.
அதற்கு மறுநாள் சாற்றை எடுத்து மேலோடு ஒரு பாத்திரத்தில் விடவும். அடியில் மண் தங்கியிருக்குமாதலால் மேலோடு விட வேண்டும்.
பிறகு அந்த சாற்றை அடுப்பில் பொங்கவைத்துப் பொங்கியவுடன் காயவைத்த தளரை மட்டும் போட்டு ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கிவிட வேண்டும்.
வெந்தயத்தை இலேசாக வறுத்துப் பொடி செய்து தூவவும். மஞ்சள் பொடி, மிளகாயை வறுத்து இடித்த தூள் இவற்றையும் சேர்த்து நன்கு குலுக்கி விடவும்.
ஒரு வாணலியில் அரை ஆழாக்கு எண்ணெய் விட்டுக் கடுகு, பெருங்காயம் இவற்றைப் போட்டு வறுத்து எண்ணெயோடு கொட்டி குலுக்கி வைக்கவும். கொட்டையை குழம்பு செய்ய உபயோகிக்கலாம்.


மேலும் சில குறிப்புகள்