கேழ்வரகு உருண்டை

என் பாட்டி கேழ்வரகு, சிறிது வெல்லம், வேர்கடலை சேர்த்து ஒரு உருண்டை செய்வார்கள். எப்படி செய்வது என்று சொல்லுங்களேன் ப்ளீஸ்.

கவிதா, நீங்க கேட்ட கேழ்வரகு உருண்டைக்கு இந்த
http://www.arusuvai.com/tamil/node/3699
லின்க்கில் உள்ள திருமதி செல்வி அவர்களின் குறிப்பின்படி முதலில் புட்டு செய்து, அது சூடாக இருக்கும்போதே,அதில் சர்க்கரைக்கு பதில் துறுவிய வெல்லம், வறுத்த வேர்கடலை, வறுத்த எள், தேங்காய் துறுவல் சேர்த்து கலந்து, உருண்டைகளாக பிடிக்க வேண்டும்.(சூடாக இருக்கும்போதே செய்தால்தான், வெல்லம் பிசுபிசுத்து உருண்டைகள் பிடிக்க வரும்.)
இந்த கேள்வியை கேட்டு என் மலரும் நினைவுகளுக்கு என்னை போக வச்சுட்டீங்க.

மேலும் சில பதிவுகள்