எண்ணெய் கத்திரிக்காய் சட்னி

தேதி: September 28, 2007

பரிமாறும் அளவு: பதினாறு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்திரிக்காய் - அரை கிலோ
நல்லெண்ணெய் - கால் கிலோ
புளி - ஐம்பது கிராம்
கடுகு - ஒரு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
பூண்டு - ஐந்து பல்
கறிவேப்பிலை - மூன்று கொத்து
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
சீரகம் - இரண்டு டேபிள் ஸ்பூன்
கருப்பு எள் - ஐம்பது கிராம்
கொத்தமல்லி - மேலே தூவ சிறிது
மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன்
தனியாத்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்


 

கத்திரிக்காயை ஸ்டஃப் செய்வதற்கு அரிவது போல் அரிந்து தண்ணீரில் ஊற போடவும்.
புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும்.
சீரகத்தை லேசாக வறுத்து எடுத்து விட்டு, எள்ளை கல் இல்லாமல் அரித்து எடுத்து ஈரமில்லாமல் வறுத்து எடுக்கவும். சீரகம், எள் இரண்டையும் மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி மையாக அரைத்து எடுக்கவும்.
இப்போது சட்டியில் நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, மிளகு, பூண்டு தட்டி போட்டு, கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
வெங்காயம், தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
பிறகு கத்திரிக்காயை அதில் போட்டு மூடிபோட்டு இரண்டு நிமிடம் வேக விடவும்.
மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்கவும்.
வதக்கி கரைத்து வைத்த புளியையும், அரைத்து வைத்த எள், சீரகத்தையும் போடவேண்டும்.
நன்கு கொதித்ததும் கொத்தமல்லியை தூவி இறக்கவும்.


சென்னையில் செய்யும் கல்யாண பிரியாணிக்கு செய்யும் எண்ணெய் கத்திரிக்காய் சட்னி ரொம்ப டேஸ்டியாக இருக்கும் ட்ரை பண்ணிப் பாருங்கள்.
கத்தரிக்காய் உடைந்து விடும் மெதுவாக பிரட்டவும். இது லெமன் ரைஸ், தயிர் சாதத்திற்கு ரொம்ப சூப்பரான சைட் டிஷ்.

மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் ஜலிலா
னன்றி.னான் கேட்ட ரெcஇபெ இதெதான்
இதில் பாதாம் சேர்கலாமா?
பாதாமை THஓள் உரித்து (grind) சேர்கலாமா?
புவனா

டியர் புவனேஸ்வரி பிரியாணி என்றால் இது தான் முக்கால் வாசி செய்வோம்.தக்காளி பேஸ்ட் போட்ட கூட நல்ல சிகப்பாக இருக்கும்.
பாதாம் இது வரை சேர்த்ததில்லை சேர்த்தால் அது ஒரு தனி ருசி.
எள் கிடைக்கவில்லை என்றால் அரைத்து ஊற்ற தேவைஇல்லை தாளிக்கும் போது முழு சீரகம் மட்டும் சேர்த்து கொள்ளவும்.
ஜலீலா

Jaleelakamal

டியர் ஜலிலா
இன்று உஙகளின் இந்த ரெcஇபி செய்தென்
னன்ட்ராக இருந்தது .பாதாம் செர்கவில்லை
னன்றி
புவனா

டியர் புவனா எண்ணை கத்திரிக்காய் செய்து பார்த்தது ரொம்ப சந்தோஷம்.
ஜலீலா

Jaleelakamal

அன்புள்ள ஜலீலா நலமா?

இன்று கத்திரிக்காய் சட்னி செய்தேன்.நன்றாக இருந்தது.அதில் நல்லெண்ணை போடவில்லை.சன் பிளவர் ஆயில் தான் அதும் சிறிது தான் விட்டேன்.நன்றாக இருந்தது.

வேலையும் பார்த்துகொண்டு வீட்டிலும் வித விதமாய் சமைக்கவும் செய்கிறீர்கள்.குறிப்பும் தருகிர்கள்.பாராட்டுக்கள்.

உங்கள் உடல்நிலைபற்றி எலுதியிருந்தீர்கள்.மனதிர்க்கு சங்கடமாக இருந்தது.எனக்கு நியாபகம் வரும் போது உங்களுக்காக துவா செய்கிறேன்.

மேலும் பல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துகிறேன்.
மிகவும் நன்றி ஜலீலா.

அன்புடன் பர்வீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் பர்வீன் நல்லெண்ணை இல்லை என்றல் ஆலிவ் ஆயில் கூட சேர்க்கலாம்.
உடல் நிலை சரியில்லை தான் ஆனால் அதற்காகா ஒரு பாயை போட்டு படுக்கிற கதையெல்லாம் கிடையாது அது பாட்டு ஒரு பக்கத்தில் இருந்து கொண்டே இருக்கும் நான் பாட்டு என் வேலையை பார்த்து கொண்டே இருப்பேன்.
ஜலீலா

Jaleelakamal

வாலைகும் ஸலாம்.

சவ்க்கியமா?நான் இன்னைக்கு கறிகுழம்பு,ரைஸ்.

இரவுக்கு தோசை உங்க கத்திரிக்காய் சட்னி.செய்ய இருக்கிரேன்.

உங்க வீட்டில என்ன சமயல் ஜலீலா..அசத்தலா இருக்கும்?

பர்வீன் தக்காளிக்கு பதில் டொமேடோ பேஸ்ட் போட்டா கூட நல்லருக்கும் கத்திரிக்காய் உடையகூடாது அப்ப்டியே முழுசா இருக்கனும்.
இன்று என் வீட்டில்
காலை ஷீர் குர்மா,நுடுல்ஸ்
மதியம், பிளெயின் ரைஸ்,தக்காளி ரசம்,வெங்காய இறால்,அவரைக்காய் பொரியல், வெண்டைக்காய் வருவல். நைட்டும் அதே தான். முடிந்தால் ரொட்டி. இல்லை சாதமே
ஜலீலா

Jaleelakamal

ம்ம்...அசத்தலா இருக்கு உங்க சமையல்...மாஷா அல்லஹ்.

நீங்க சொல்வது போல தக்காளி பேஸ்ட் போட்டு செய்யது பார்க்கிரேன் ஜலீலா.

நீங்க வேலைக்கும் போரீங்க.என்ன டைம் சமயல் எல்லாம் முடித்து விட்டு போவீங்க.

பர்வீன்.

காலை ஐந்திலிருந்து எட்டு வரை முடித்து விட்டு போவேன்.
என்ன செய்வது என்று முதலே நினைத்து வைத்தால் ஒகெ இல்லை நினைத்து நினைத்து மண்டை குழம்பி விடும், வேலையும் ஓடாது. எது செய்தாலும் பாதியில் நிற்கும் பிறகு மதியம் வந்து தொடர்வேன். முதல் வீட்டில் இருக்கும் போது நினைப்பேன் எப்ப்டி தான் வேலைகும் போய் கொண்டு சமாளிக்கிறார் களோ என்று. முதலி செல்லும் போது ஒரே தலை வலி, எதுவுமே செட் ஆகவில்லை, பஸ்ஸில் தான் போகனும் நாலு முறை.
பையனை பேபி சிட்டிங்கில் விட்டு விட்டு போகனும் இந்த மாதிரி எல்லாம் பட்ட அவஸ்த்தைகளை சொல்ல ஒரு நாள் போதாது

ஜலீலா

Jaleelakamal

முத தடவை உங்க கிட்ட பேசறேன்.உங்க பதிவுகள் நெறைய பார்ப்பேன்.அதில் வித விதமாக சமையல் செய்ததாக இருக்கும்.எப்படி வேலைக்கும் போயிகிட்டு இவளவு செய்யறீங்க? என்னக்கு வீட்டில் நெறைய shelf அடுகாம அப்படியே குப்பையாகெடக்கு..எல்லவரியும் செய்ய முடியல...எப்படி டைம் மநேஜ் பண்றீங்க?

டியர் RSMV
ரொம்ப கழ்டம், பறந்து பறந்து வேலை பார்க்கனும், துணி மடிக நேரம் இல்லை, சல நேரம் சிம்பிளான வேலை வைத்து கொண்டு ஒவ்வொரு நாளிக்கு ஒவ்வொரு வேலை, லீவு நாட்கலில் வெளியில் போவது கிடையாதுமுடிந்த வரை கீளினிங் .
வேற இடத்தில் பேசலாம. எஆன் என் கதையை சொல்வதாக இர்ந்தால் சொல்லி மாள முடியாது.
ஜலீலா

Jaleelakamal

ஓகே ஓகே நான் ஒரு புது கேள்வி சேர்த்திருக்கிறேன்...அங்க பேசலாம் - (ஹையா ஜாலி அரட்டை அரங்கம் ...)

அன்புள்ள ஜலீலா
நேத்தும் செய்தேன் .நல்லா வந்திச்சு.உங்க வேலை வியங்கலை படித்ததும் தெரிந்தது.நீங்க ரொம்ப பிஸி அதே சமயம் மாஷா அல்லாஹ் உங்களூக்கு நல்ல சுறுசுறுப்பு.

மிகவும் நன்றி ஜலீலா.

நிருபமா எண்ணை கத்திரிக்காய் கிராம் அளவில் தக்காளி, வெங்காயம் பார்த்து கொள்ளவும்.

Jaleelakamal

டியர் ஜலீலா அக்கா,

உங்க சிக்கன் பிரியாணியும், இந்த எண்ணெய் கத்திரிக்காயும் இன்று செய்தேன்.சூப்பர் காம்பினேஷன்.எண்ணெய் கத்திரிக்காய் மிகவும் சுவையாக இருந்தது .இருவரும் விரும்பி உண்டோம். இந்த ரெஸிபியை கற்றுக் கொள்ள உதவிய தங்களுக்கு மிக்க நன்றி.

நிருபமா

அருமை தங்கை நிருப்பமா
இஸ்லாமிய இல்ல கல்யாணங்களில்
பிரியாணி என்றால் எண்ணை கத்திரிக்காய் இல்லாமல் இருக்காது//

இது ரொம்ப நல்லாவே வரும்.//
கல்யாண பிரியாணிக்கும் செய்யும் அளவு பத்து பதினைந்து கிலோ செய்வார்கள்.வெரும் சாதத்திற்கும் தொட்டு கொள்ள நல்ல இருக்கும்.
செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி

ஜலீலா

Jaleelakamal

ரொம்ப சூப்பர் ஜலீலாக்கா!!! பச்சைகலர் கத்திரிக்காய் தான் கிடைச்சது... ரொம்ப நல்லா வந்துஇருந்தது.. விஜியோட கூட்டுக்கு இது நல்ல பக்க உணவாக இருந்தது... இதுவும் ரொம்ப நாளா செய்யனும்ம்ன்னு பாத்துட்டே இருந்தேன்... இன்னைக்கு தான் வசமா காம்பினேஷன் அமைந்தது.... சாதம் வேகும் வரை கொஞ்சம் கொஞ்சமா ஸ்பூனால் சாப்பிட்டுகொண்டே இருந்தேன்...

"People often say that motivation doesn't last. Well, neither does bathing - that's why we recommend it daily " - Zig Ziglar

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

டியர் இலா

எண்ணை கத்திரிக்காய் செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.
பச்சை கத்திரிக்காய் இன்னும் நல்ல இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீ உங்க எண்ணெய்கத்தரிகாய் சட்னியும் ஸாதிகா அக்காவின் தம் பிரியாணி(வெஜ்) செய்து அசத்திட்டேன். இருவருக்கும் நன்றி. நல்ல காம்பினேஷன்.
இந்த மாதிரி உங்களுக்கு தெரிந்த காம்பினேஷன் ரெசிப்பி தெரிந்தால் சொல்லுங்க.

அருமை தோழி விஜி இந்த எண்ணை கத்திரிக்காய் சூப்பர் கல்யாண வீடுகளில் ஹிட் எல்லா பிரியாணிக்கு செய்வார்கள்.
என்னுடைய குறிப்பை பார்க்கவில்லையா?
என்னுடையது எல்லாமே காம்பினேஷன் மெனுதான். ஒரு குறிப்பை கொடுத்துவிட்டு அதன் குறிப்பில் இது எதுக்கு காம்பினேஷன் என்று கொடுத்திருப்பேன். ஒரு சிலதுக்கு தான் டைம் இல்லை என்றால் விபரிக்க முடியாமல் விட்டு இருப்பேன். இல்லை அடிக்கும் போது எரர் வந்ஹ்டாலும் விட்டு இருப்பேன்.

எண்ணை கத்திரிக்காய் பின்னூடத்துக்கு நன்றி.
ஜலீலா

Jaleelakamal

வெள்ளை எள் யூஸ் பண்ணலாமா?அல்லது எள்ளே போடாமல் செய்யலாமா?சீக்கீரமா பதில் சொல்லுங்க?இப்ப சமைக்கனும் அதான்?

சுகன்யா கருப்பு எள் தான் விஷேஷங்களில் போடுவோம்.

கிடைக்காத பட்சத்தில் வெள்ளை எள் நான் இங்கு எனக்கு ரோஸ்டட் வெள்ளை எள் கிடைக்கும் அதுவும் போடுவேன்.
ஜலீலா

Jaleelakamal

நன்றி ஜலீலா மேடம் தங்களின் உடனடி பதிலுக்கு,பாப்பா இருக்கா அதான் அவ்வளவா எள் யூஸ் பண்ண மாட்டேன்.கொஞ்சமா யூஸ் பண்ணி பார்த்துட்டு சொல்றேன்.

மேடம் நான் வீட்டில் வறுத்த எள் வைத்திருந்தேன்.அதை எப்படி காலி செய்வது என்று நினைத்திருந்தேன்.தங்களின் டிப்ஸால் அதை இதில் உபயோகித்து விட்டேன்.சூப்பரோ சூப்பர் மேடம்.டேஸ்ட் ரொம்ப அருமையா இருக்கு!இனிமேல் தான் சாப்பிடனும்.

டைப் பண்ணும் போது கூட நடுவில் போய் ஒரு சிப் குடித்து பார்த்துவிட்டு இந்த பத்தியை டைப் பண்றேன்.சாதா க்ரேவியில் இருந்து இது வித்தியாசப்பட காரணம் இந்த எள்ளும்,சீரகமும் தான்.ரொம்ப நன்றி!

அக்கா இந்த எணெய் கத்திரிக்காய் செய்துபார்த்தேன்,எப்பொழுதும் நான் எள் சேர்த்து செய்ததில்லை மற்றபடி உங்கள் மெத்தெட் தான் ஆனால் கொஞ்சம் தேங்காய்ப்பால் சேர்ப்பேன்,எள் சேர்ப்பது வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருந்தது,பிரியாணிக்கு தொட்டுகொள்ள அருமையா இருந்தது!நன்றி அக்கா!

அக்கா,

இப்போ இந்த ரெசிபி செய்தேன். சுவையாக இருக்கு. இன்னும் சாதம் வைக்கவில்லை. அதற்குள் சொல்லலாம் என வந்தேன். ரொம்ப நன்றி அக்கா. நான் இனி அடிக்கடி செய்வேன். :)

இஸ்லாமிய இல்ல விஷேஷங்களிலும்,ஈது நாட்களிலும் செய்வோம். இதை பொடியாக கட் பண்ணியும் செய்யலாம்.

டியர் சுகன்யா, எண்ணை கத்திரிக்காய் செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.
ஆமாம் இதில் எள்ளும் சீரகமும் சேர்வதால் இன்னும் நல்ல இருக்கும்.

ஜலீலா

Jaleelakamal

டியர் ரஸியா இது பிரியாணிக்கு ஏற்றது தான் எல்லோரும் செய்வது தான் ஓ நீங்கள் தேங்காய் பால் ஊற்றி செய்வீர்களா?
நானும் செய்து பார்க்கிறேன்.
உங்கள் பின்னூட்டத்து நன்றி.
ஜலீலா

Jaleelakamal

டியர் கவின் எண்ணை கத்திரிக்காய் என்ன பா செய்து முடித்ததும் உடனே பின்னூட்டம் கொடுத்து விட்டீர்கள். அவ்வளவு ருசியா இருந்ததா?

உங்கள் உடனடி பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
ஜலீலா

Jaleelakamal

இன்று கல்யாணநாள் ஸ்பெஷல் அயிட்டம் உங்க எண்ணெய் கத்தரிகாய் & வெஜ் பிரியாணி. நல்ல காம்பினேஷன், இனிமேல் தான் சாப்பிட போகிறோம்.
நன்றி. கொஞ்சம் சாப்பிட்டு பார்த்தேன் நல்ல டேஸ்டியா இருந்தது.

விஜி இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

இந்த விசேஷமான நாளில் இந்த எண்ணை கத்திரிக்காய் செய்தது ரொம்ப சந்தோஷம்/

போன வருடம் என் ஷீர் குருமா (பாயாசம்) எண்ணை நீங்கள் மறக்கல/

நன்றி.

Jaleelakamal

your dish is very taste.eppadi ippadi ungala mattum velaikum poitu samayalum panamudiyuthu.unga dish ellame super.pls reply pannunga.

அன்பு இந்து உங்கள் பாராட்டுகு மிக்க நன்றி.

முதலில் சமையல் , பிறகு தான் வேலை. ஓவ்வொருவருக்கும் ஓரு பொழுது போக்கு எனக்கு சமையல் குறிப்பு அனுப்புவது அதன் மூலம் உலகில் உள்ள அனைத்து தோழுகள் பயனடைவது, அது எனக்கு ரொம்ப சந்தோஷம்.

எண்ணை கத்த்திரிக்காய் இது கல்யாணவிருந்தில் பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள செய்வது. ரொம்ப சூப்பரா இருக்கும்

Jaleelakamal