5 ஸ்டார் ப்ரைட் ரைஸ்

தேதி: September 28, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாஸ்மதி அரிசி - ஒரு கப்
கேரட், பீன்ஸ், குடைமிளகாய், காலிஃப்ளவர் சேர்த்து - ஒரு கப்
நெய் - ஒரு ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 2 ஸ்பூன்
சீனி - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
அஜினோமோட்டோ - 1/4 ஸ்பூன்
வெங்காயத்தாள் - 4
உப்பு - தேவைக்கு


 

அரிசியை முக்கால் பதமாக வேக வைக்கவும்.
காய்கறிகளை பொடியாக நீட்டமாக நறுக்கவும்.
வாணலியில் நெய் விட்டு காய்கறிகளை போட்டு வதக்கவும். பின்பு சாதத்தை போட்டு உடையாமல் கிளறவும்.
பிறகு எலுமிச்சைச்சாறு, உப்பு, சீனி, மிளகுத்தூள், அஜினோமோட்டோ ஆகியவற்றை போட்டு சாதம் உடையாமல் கிளறவும்.
நறுக்கிய வெங்காயத் தாளை தூவி பரிமாறவும்.


அரிசியை வேக வைக்கும் போது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டால் சாதம் ஒன்றோடொன்று ஒட்டாது.

மேலும் சில குறிப்புகள்


Comments

thank u so much

அன்புள்ள பீவி, நான் இந்த ஃப்ரைட் ரைஸை செய்து பார்த்தேன். செய்வதற்கு மிகவும் சுலபமாகவும், ரொம்ப நன்றாகவும் இருந்தது. நன்றி.