soft மக்ரோனி செய்வது எப்படி plz help me

hi, மக்ரோனி எப்படி soft -ஆ செய்வது, நான் try பன்னினா உப்புமா மாதிரி தான் இருக்கு
plz help me. thanks in advance

உப்புமா மாதிரின்னா ஒடஞ்சு போயிடுது,ஷேப் கெடைக்க மாட்டெங்குதா?தண்ணீரில் மக்ரோனி போட்டு கொஞ்சம் உப்பும் ,2 ஸ்பூன் எண்ணை சேர்த்து கொதிக்க விடனும்..தண்ணீர் ரொம்ப கம்மியா இல்லாம மக்ரோனிக்கு 1/2 இன்ச் மேல இருக்கர மாதிரி பாத்துக்குங்க...வெந்துதானு ஒன்னு எடுத்து சாப்பிட்டு பாத்த தெரியும்...ஷேப் அப்டியே இருக்கனும் ஆனா வெந்திருக்கனும் அதான் அளவு....வெந்ததும் ஓட்டைஓட்டையா உள்ள பாத்திரதில் ஊற்றி தண்ணி வடிஞ்சதும் குளிர்ந்த நீரை மேலே ஊற்றவும்..இப்ப மக்ரோனி தணி தணியா அழகா வரும்..அதுகப்ரம் வேன்டிய மசால செய்து மக்ரோனி சேத்து 5 நிமிஷம் மூடி வெச்சா சுவையானா அழகான மக்ரோனி ரெடி

தளிகா:-)

hello தளிகா mam, நீங்க சொன்ன மாதிரி செய்தேன் super- ஆ வந்தது மிகவும் நன்றி :-)

mk

முன்ன இங்க கலக்கிடிருந்த வாணி கானாமப் போயிட்டாங்க...உங்க பேரைப் பாத்ததும் அவங்க நியாபகம் வந்துடுச்சு...நல்ல வந்ததுன்னதுல எனக்கு தான் சந்தோஷம் வாணி:-D

தளிகா:-)

நான் அவங்க அளவு இருக்க மாட்டேன். அருசுவை.com join பன்னின பிறகு தான் அம்மா பாராட்டிராங்க 1 வருசம் சமயல் செய்தும் இப்பொழுது தான் மிகவும் நல்லா சமைகிர -ணூ சொல்ராங்க :-)

mk

எப்படியோ இப்ப பாராட்டு கெடச்சுடுச்சே ....சமையல்னு இல்லை எல்லாம் அப்படி தான்....செய்ய செய்ய தான் நல்ல வரும்ல வாணி
நான் வெங்காயம்,குடைமிளகாய்,பச்சை மிளகாய்,காய்கறிகள் வதக்கி....அதில் மக்ரோனி போட்டு உப்பு,கொஞ்சம் கரம் மசல பொடி,குருமிளகு பொடி தூவி சோய்,தக்காளி சாஸ் சேத்து
முட்டையை கலக்கி பொரித்து இதனுடன் சேர்த்துட்ட் கடசீல மல்லி இலை தூவி இறக்குவேன்..நல்ல வரும்..நீங்க எப்படி செய்வீங்க?

தளிகா:-)

நான் நீஙக சொன்ன மாதிரி macroni செய்து ,வெங்காயம், மிலகாய், கரம் மசாலா(or) சிக்கன் மசாலா போட்டு வதக்கி, எதாவது ஒரு காய் (or) முட்டை சேர்த்து பன்னுவேன், எங்க வீட்டில் என்னை தவிர tomoto sauce யாருக்கும் பிடிக்காது. so add the sauce seperately ;-)

mk

மேலும் சில பதிவுகள்