உருளைக்கிழங்கு தேன்குழல்

தேதி: September 28, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வேக வைத்து மையாக மசித்த உருளைக்கிழங்கு - 1 கப்
கழுவி, காய வைத்து, பொடித்த அரிசி மாவு - 1 கப்
எள் அல்லது சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 டீஸ்பூன்
காய வைத்த எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.


 

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்குடன் அரிசி மாவு, காய வைத்த எண்ணெய், எள் அல்லது சீரகம், பெருங்காயப் பொடி, உப்பு எல்லாவற்றையும் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
பின்னர், எண்ணெயைக்காய வைத்து தேன்குழல் அச்சில் பிழிந்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்