தக்காளி குழம்பு

தேதி: September 28, 2007

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு)

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பழுத்த தக்காளி - 2
தேங்காய் - அரை மூடி
சின்ன வெங்காயம் - 3
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து


 

தக்காளியை குக்கரில் போட்டு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேக விடவும்.
அரை மூடி தேங்காயும், 3 சின்ன வெங்காயமும் சேர்த்து விழுது போல் அரைக்கவும்.
வேகவைத்த தக்காளியை மசித்து விட்டு அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு கொதிவந்தால் போதும். பிறகு தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ஊற்றவும்.


சுலபமாக 10 நிமிடத்தில் சுவையாக தயாரிக்கலாம். அசைவம் சாப்பிடுபவர்கள் தக்காளி வேக வைக்கும்போது 10 இறாலையும் சேர்த்து வேகவைத்தால் அருமையான நாடன் கேரளா செம்மீன் கறி ரெடி.

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று தக்காளிக்குழம்பு செய்தேன். சப்பாத்திக்கு பக்க உணவாக அருமையாக இருந்தது.
"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அப்படியா இலா..தக்காளி குழம்பு சாதத்துக்கு இன்னும் அருமையாக இருக்கும் என் மகள் விரும்பி உண்ணும் ஒரே குழம்பு இதில் இறால் சேர்த்தால் சொல்லவே வேனாம் ரொம்ப அருமையா இருக்கும்.

ஹாய் தளிகா
உங்க தக்காளி குழம்பு சூப்பர். ரொம்ப ஈஸியா இருந்தது.
ரவா தோசையுடன் சாப்பிட்டோம். ஒரு வாரமா என் வீட்டில் கேரளா சமையல் வாசம் அருமை..நான் தேங்காய் எண்ணைய் சமையலில் சேர்க்க ரொம்ப யோசிப்பேன். இப்போ உங்க ரெசிபியால் பழகிட்டேன்.

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

தேன்க்ஸ் மீனா..அப்டியே பழகிட வேனாம் பழையது போலவே செய்யுங்க..சில குறிப்புக்கு நல்லா இருக்கும்..நாங்க சின்னதுல இருந்தே தேங்காய் எண்ணை சாப்பிட்டு பழகினவங்க புதுசா சாப்பிட்டு பழகினா ஒரு வேளை கொலெஸ்ட்ரால் ப்ரச்சனை வரலாம்..சின்ன பிள்ளைகளுக்கு 1/4 கப் தே.எண்ணை கொடுப்பார்கள் கோல்டுக்கு சளி கரைந்து விடும்:-D..THANX MINA

ஹாய் தளிகா,
சரி, எல்லா பின்னூட்டங்களையும் இந்த தளத்திலேயே கொடுத்து உங்களை இப்போவே சந்தோஷப்படுத்தலாம்னு களத்தில் இறங்கிடேன்!! : )

உங்க தக்காளி குழம்பு போன சன்டே செய்தேன். நல்லா காரசாரமா சூப்பரா இருந்தது. சாதத்துடன் சாப்பிட்டோம். நன்றி!

அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ